அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று யார் (உறுதிமொழி) கூறி, (மக்களால்) வழிபாடு செய்யப்படும் இதர தெய்வங்களை…

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று யார் (உறுதிமொழி) கூறி, (மக்களால்) வழிபாடு செய்யப்படும் இதர தெய்வங்களை நிராகரித்து விடுகிறாரோ அவரது உடைமையும், உயிரும் பாதுகாப்புப் பெற்றுவிடும். அவரது (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக தாரிக் பின் அஷ்யம் அல்அஷ்ஜஈ (ரலி) அவர்கள் கூறினார்கள் : "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை (லாஇலாஹ இல்லல்லாஹ்) என்று யார் (உறுதிமொழி) கூறி, (மக்களால்) வழிபாடு செய்யப்படும் இதர தெய்வங்களை நிராகரித்து விடுகிறாரோ அவரது உடைமையும் உயிரும் பாதுகாப்புப் பெற்றுவிடும். அவரது (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது".

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

ஒரு மனிதனைக் கொல்வதும், அவனது உடமையை அபகரிப்பதும் இரு விடயங்கள் ஒருங்கிணையும் போதே தவிர ஹராமாக மாட்டாது என நபியவர்கள் இந்நபிமொழியில் விளக்குகின்றார்கள். 1. லாஇலாஹ இல்லல்லாஹ் எனும் வார்த்தையை மொழிதல். 2. அல்லாஹ் அல்லாது வணங்கப்படுபவற்றை மறுக்க வேண்டும். இவ்விரு விடயங்களும் அவனிடம் காணப்பட்டால் வெளிப்படையாக அவனைப் பாதுகாப்பது அவசியமாகும்,உள்ரங்கத்தை அல்லாஹ்விடம் சாட்டிவிட வேண்டும், மதம் மாறுதல் போன்ற மரணதண்டனைக் குற்றம், ஸகாத் தர மறுத்தல், கடனைத் திருப்பிச் செலுத்துவதில் இழுத்தடித்தல் போன்ற உடமை, மானம் தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபட்டாலே தவிர, .

فوائد الحديث

லாஇலாஹ இல்லல்லாஹ் என்பதன் அர்த்தம் சிலைகள், சமாதிகள் போன்ற அல்லாஹ் அல்லாது வணங்கப் படுபவற்றை மறுப்பதாகும்.

அல்லாஹ் அல்லாது வணங்கப் படுபவற்றை மறுக்காமல் வெறுமனே லாஇலாஹ இல்லல்லாஹ் என மாத்திரம் மொழிவதால்- அதனை அறிந்து, செயல்பட்டாலும்- உயிருக்கோ, உடமைக்கோ உத்தரவாதம் கிடையாது. மாறாக அல்லாஹ் அல்லாது வணங்கப் படுபவற்றை மறுப்பதையும் அதனுடன் இணைக்க வேண்டும்.

வெளிப்படையாக ஓரிறைக் கொள்கையை ஏற்று, அதன் சட்ட திட்டங்களைக் கடைபிடித்தால் அதற்கு முரணான விடயங்கள் தெளிவாகும் வரை அவனது உயிர், உடமைகளுக்குத் தீங்கிழைக்காது தடுத்துக் கொள்வது அவசியமாகும்.

போர்க் களத்திலும் சரி ஒரு காபிர் இஸ்லாத்தில் இணைந்து விட்டால் அதற்கு முரணான நிலை அறியப்படும் வரை அவனது உயிர், உடமைகளுக்குத் தீங்கிழைக்காது தடுத்துக் கொள்வது அவசியமாகும்.

ஒரு மனிதன் சிலவேளை லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறுவான், ஆனால் அல்லாஹ் அல்லாது வணங்கப் படுபவற்றை மறுக்க மாட்டான்.

இவ்வுலகில் வெளிப்படையை வைத்தே தீர்ப்பு வழங்கப்படும். மறுமையில் எண்ணங்கள், நோக்கங்களை வைத்துத் தீர்ப்பளிக்கப்படும்.

ஒரு முஸ்லிமின் உடமை, உயிர் புனிதமானது, தகுந்த காரணமின்றி அதற்கு சேதம் விளைவிக்க முடியாது.

இஸ்லாம் ஒரு மனிதனின் உயிர், உடமைகளைப் பாதுகாப்பதால் அதன் சிறப்பு தெளிவாகின்றது.

மார்க்க அடிப்படையில் விதியாகும் ஸகாத், அல்லது சேதம் விளைவித்ததற்காக நட்டஈடு வழங்க வைத்தல் போன்ற காரணங்களுக்காகத் தவிர ஒரு முஸ்லிமுடைய உடமையை அபகரிப்பது ஹராமாகும்.

التصنيفات

வணக்க வழிபாடுகளில் ஏகத்துவம், வணக்க வழிபாடுகளில் ஏகத்துவம்