பாவங்களிலேயே மிகப் பெரியது எது?' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன், "அல்லாஹ் உன்னைப் படைத்திருக்கும் போது…

பாவங்களிலேயே மிகப் பெரியது எது?' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன், "அல்லாஹ் உன்னைப் படைத்திருக்கும் போது அவனுக்கு நீ நிகர் உண்டாக்குவதாகும் என பதிலளித்தார்கள்".

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) கூறுகின்றார் : நான், நபி (ஸல்) அவர்களிடம் 'பாவங்களிலேயே மிகப் பெரியது எது?' என்று கேட்டேன். ''உன்னைப் படைத்த, இறைவனுக்கே நீ இணைகற்பிப்பது ஆகும்'' என்று பதிலளித்தார்கள். 'பிறகு எது?' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ''உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீயே கொலை செய்வது'' என்று கூறினார்கள். நான், 'பிறகு எது?' என்றேன். ''உன் அண்டை வீட்டுக்காரனின் மனைவியுடன் நீ விபசாரம் புரிவது'' என்றார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நபித்தோழர் பாவங்களில் மிகப் பெரியது பற்றி வினவ, அதனை நபியவர்கள் அறிவித்தார்கள். முதலாவது இணைவைப்பாகும். இதனை அல்லாஹ் தவ்பாவை அன்றி மன்னிக்க மாட்டான், அதே நிலையில் மரணித்தால் நரகில் நிரந்தரமாக இருப்பான். பின்னர் தனது உணவில் பங்கு கொள்ளும் அச்சத்தில் ஒரு மனிதன் தனது பிள்ளையைக் கொல்வதாகும். அல்லாஹ் தடைசெய்த உயிர்களைக் கொல்வது இரண்டாவது பெரிய பாவமாகும். கொல்லப்பட்டவர் கொலையாளியின் உறவுக்காரராக இருந்தால் பாவத்தின் கொடூரம் இன்னும் அதிகரிக்கும். அதுவே அல்லாஹ் வாழ்வாதாரத்தின் வழியை இவரது வழியில் வைத்திருக்க, அதைத் துண்டிக்கும் நோக்கில் கொலை செய்தால் பாவத்தின் வீரியம் இன்னும் அதிகரிக்கும். பின்னர் தனது அயலவரின் மனைவியுடன் விபச்சாரத்தில் ஈடுபடுவதாகும். பெரும்பாவங்களில் விபச்சாரம் மூன்றாவதாகும். அதுவே உபகாரம், நலவு செய்யுமாறும், நல்ல நட்புடன் இருக்குமாறும் மார்க்கம் உபதேசித்துள்ள அயலவரின் மனைவியுடன் ஈடுபட்டால் பாவம் இன்னும் கடுமையாகும்.

فوائد الحديث

நற்செயல்கள் சிறப்புகளில் வேறுபடுவது போல், பாவங்களும் அதன் வீரியத்தில் வேறுபடுகின்றது.

பாவங்களில் மிகப் பெரியது அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, பின் அல்லாஹ் தடுத்துள்ள ஓர் உயிரை உரிமையின்றி கொல்லுதல், பின் விபச்சாரம் என்பதை இந்நபிமொழி அறிவிக்கின்றது.

التصنيفات

பரிபாலித்தல் விடயத்தில் ஏகத்துவம்