மறுமை நாளில் நரகவாதிகளுள் ஆகக் குறைந்த வேதனையை அனுபவிக்கும் ஒருவனிடம் : பூமியில் உனக்கு சொந்தமாக ஏதாவது…

மறுமை நாளில் நரகவாதிகளுள் ஆகக் குறைந்த வேதனையை அனுபவிக்கும் ஒருவனிடம் : பூமியில் உனக்கு சொந்தமாக ஏதாவது இருந்தால் அதனை பிணையாக- இழப்பீடாக- வழங்கி இந்த வேதனையிலிருந்து விடுதலைபெற முயற்சிப்பீரா? என்று கேட்பான். அதற்கு அவன் 'ஆம்';

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: மறுமை நாளில் நரகவாதிகளுள் ஆகக் குறைந்த வேதனையை அனுபவிக்கும் ஒருவனிடம் : பூமியில் உனக்கு சொந்தமாக ஏதாவது இருந்தால் அதனை பிணையாக- இழப்பீடாக- வழங்கி இந்த வேதனையிலிருந்து விடுதலைபெற முயற்சிப்பீரா? என்று கேட்பான். அதற்கு அவன் 'ஆம்'; என்று கூறுவான். அப்போது அல்லாஹ் அவனிடம் நீ ஆதத்தின் முதுகுத்தண்டில் இருக்கும் போது, இதனை விடவும் சிறிய ஒரு விடயமான நீ எனக்கு இணைவைக்கக் கூடாது என்பதையே எதிர்பார்த்தேன். ஆனால் அதனை நீ ஏற்றுக் கொள்ளாது எனக்கு நீ இணைவைத்தாய் என்று கூறுவான்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நரகவாதிகளுள் மிகக் குறைந்த தண்டனையைப் பெறும் ஒரு அடியானிடத்தில் அவன் நரகில் நுழைந்த பின் ' உமக்கு உலகமும் அதிலுள்ளவைகளும் சொந்தமாயிருப்பின் இந்த வேதனைக்கான இழப்பீடாக அவற்றை செலுத்துவாயா? என்று மறுமையில் அல்லாஹ் வினவுவதாக குறிப்பிடுகிறார்கள். அதற்கு அந்த அடியான் 'ஆம்'என்று கூறுவான். அதற்கு அல்லாஹ் அவனிடம் 'நீ ஆதமின் முதுகுத் தண்டில் இருக்கும் போது, உம்மிடம் உடன்படிக்கை எடுக்கும் வேளை இதனை விடவும் மிகவும் இலகுவான ஒருவிடயமான ''எனக்கு எதனையும் இணைவைக்கலாகாது ' என்று வேண்டிக் கொண்டேன். ஆனால்; நான் உன்னை பூமிக்கு அனுப்பியபோது, நீ மறுத்து ஷிர்க்கைத் தேர்ந்தெடுத்தாய் என்று கூறுவான்.

فوائد الحديث

தௌஹீதின் சிறப்பும், அதை நடைமுறைப்படுத்துவதன் எளிமையும் குறிப்பிடப்பட்டுள்ளமை.

அல்லாஹ்வுக்கு இணை வைப்பதன் (ஷிர்க்கின்) அபாயமும் மற்றும் அதன் இறுதி விளைவு குறித்தும் தெளிவு படுத்தப்பட்டுள்ளமை.

ஆதமின் சந்ததியினர் ஆதமின் முதுகில் இருக்கும்போது "தனக்கு (ஷிர்க்) இணைவைக்கக் கூடாது "என்று அல்லாஹ் அவர்களுடன் ஒரு உடன்படிக்கை எடுத்தான்.

ஷிர்க்கைப் பற்றி எச்சரிப்பதுடன், மறுமை நாளில் முழு உலகமும் காஃபிருக்கு சொந்தமாக இருந்தாலும் அது எந்தப் பயனையும் அவனுக்கு அளிக்காது என்பதை உணர்த்துதல்.

التصنيفات

வணக்க வழிபாடுகளில் ஏகத்துவம்