'எந்த ஒட்டகத்தின் கழுத்திலும் (கண் திருஷ்டி கழிவதற்காகக் கட்டப்படுகிற) நாண்போன்ற மாலையோ அல்லது வேறு ஏதாவது ஒரு…

'எந்த ஒட்டகத்தின் கழுத்திலும் (கண் திருஷ்டி கழிவதற்காகக் கட்டப்படுகிற) நாண்போன்ற மாலையோ அல்லது வேறு ஏதாவது ஒரு மாலையோ இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் கட்டாயம் அதைத் துண்டித்து விட வேண்டும்'' எனக் கூறினார்கள்

அபூபஷீர் அல் அன்ஸாரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பயணம் ஒன்றில் அவர்களுடன் அபூபஷீர் அல் அன்ஸாரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் இருந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தூதுவர் ஒருவரை அனுப்பி, 'எந்த ஒட்டகத்தின் கழுத்திலும் (கண் திருஷ்டி கழிவதற்காகக் கட்டப்படுகிற) நாண்போன்ற மாலையோ அல்லது வேறு ஏதாவது ஒரு மாலையோ இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் கட்டாயம் அதைத் துண்டித்து விட வேண்டும்'' எனக் கூறினார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது சில பயணங்களின் போது மக்கள் எல்லோரும் தங்களின் கூடாரங்களிலும், தங்குமிடங்களிலும் தூங்கிக் கொண்டிருக்கும் வேளை கண்திருஷ்டிக்காகவும், ஆபத்துக்களிலிருந்து காப்பதற்காகவும் ஒட்டகங்களின் கழுத்துக்களில் கட்டப்பட்டுள்ள மணி, அல்லது காலணி போன்றவற்றை கத்தரித்து நீக்கிவிடுமாறு ஒரு நபரை அனுப்பி வைத்தார்கள். காரணம் இவ்வாறனவை அவர்களுக்கு ஏற்படவுள்ள எந்தத் தீங்யையும் தடுத்திட மாட்டாது. அத்துடன், நன்மையோ கெடுதியோ அல்லாஹ் ஒருவனின் கைவசம் மாத்திரமே உள்ளது, அவனுக்கு இணையேதும் கிடையாது.

فوائد الحديث

நலனை பெற்றுக்கொள்ளவும், அல்லது கெடுதியிலிருந்து பாதுகாகத்துக் கொள்ளவும் கயிறுகள் மற்றும் மாலைகளை தொங்கவிடுவது ஹராமாக்கப்பட்டிருத்தல். ஏனெனில் இது இணைவைப்புச் சார்ந்த ஒரு விவகாரமாகும்.

அலங்காரத்திற்காகவும், அல்லது வாகனங்களை ஓட்டிச் செல்வதற்காகவும் வார்களிலல்லாத மாலைகளை தொங்கவிடுவதில் எவ்விதக்குற்றமுமில்லை.

இயலுமைக்கேட்ப தீமையை தடுப்பது கடமையாகும்.

இணையேதுமில்லாத அல்லாஹ் ஒருவனில் மாத்திரம் உள்ளம் இணைந்திருப்பதன் அவசியம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

التصنيفات

வணக்க வழிபாடுகளில் ஏகத்துவம்