நீங்கள் கப்ருகளை முன்னோக்கித் தொழ வேண்டாம், அவற்றின் மீது உட்காரவும் வேண்டாம்.

நீங்கள் கப்ருகளை முன்னோக்கித் தொழ வேண்டாம், அவற்றின் மீது உட்காரவும் வேண்டாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக மர்ஸத் அல்கனவீ (ரலி) கூறினார்கள் : "நீங்கள் கப்ருகளை முன்னோக்கித் தொழ வேண்டாம், அவற்றின் மீது உட்காரவும் வேண்டாம்".

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

கப்ரு தொழுபவரின் முகப்பக்கம் இருக்கும் விதத்தில் அதனை முன்னோக்கித் தொழுவதை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். அதே போன்று அதன் மீது உட்கார்வதையும் தடுத்தார்கள். அதனை மிதிப்பது, அதன் மீது மலசலம் கழிப்பதன் மூலம் அதனை அவமதிப்பதும் இதில் அடங்கும். இவையனைத்தும் ஹராமாகும்.

فوائد الحديث

கப்ரு தொழுபவரின் முகப்பக்கம் இருக்கும் விதத்தில் அதனை முன்னோக்கித் தொழுவது கூடாது, அதன் அர்த்தம் அவ்வாறான தொழுகை செல்லுபடியற்றது.

இணைவைப்பிற்கு இட்டுச் செல்லும் அனைத்து வழிகளையும் மூடுதல்.

கப்ருகள் மீது உட்கார்வது கூடாது, ஏனெனில் இச்செயல் அதில் அடங்கப்பட்டிருப்பவர்களை அவமதிப்பதாகும்.

கப்ருகள் விடயத்தில் அளவுகடந்து செல்வதையும், அவற்றை அவமதிப்பதையும் ஒருங்கிணைத்துத் தடுக்கப்பட்டிருக்கின்றது. அதனை முன்னோக்கித் தொழுவது அதனை புனிதப்படுத்தி, அளவு கடந்து செல்ல வழிவகுக்கும். அதன் மீது உட்கார்வது அதனை இழிவு படுத்த வழிவகுக்கும். எனவே இஸ்லாம் கப்ருகள் விடயத்தில் அளவு கடந்து செல்தல், அவமதித்தல் இரண்டையும் தடை செய்துள்ளது. எனவே எல்லை மீறலும் இல்லை, அலட்சியமும் இல்லை.

ஒரு முஸ்லிம் ஜனாஸாவின் மதிப்பு அவர் இறந்த பின்னரும் நிலைத்திருக்கின்றது. ஜனாஸாவின் எலும்புகளை முறிப்பது அவர் உயிருடன் இருக்கும் போதே முறிப்பதைப் போன்றாகும் என்ற நபிமொழி இதனை உறுதிசெய்கின்றது. இதனடிப்படையில் மரணித்த பின் உறுப்புக்களை வெட்டியெடுப்பதன் மூலம் மரணித்தவர்களை இழிவுபடுத்துகின்றனர். இது தவறாகும். இது ஜனாஸாவை அவமதிப்பதும், நோவினைப் படுத்துவதாகும். இதனால்தான் ஜனாஸாவின் உறுப்புக்களை அவர் மரணிக்க முன் பணித்திருந்தாலும் துண்டிப்பது ஹராமாகும் என மார்க்க சட்டக்கலை நிபுணர்கள் கூறியுள்ளனர். ஏனெனில் எந்த மனிதருக்கும் தனது உடலுறுப்பில் மாற்றம் செய்யும் அதிகாரமில்லை.

கப்ருகளில் சாய்ந்து உட்காரலாம், இது அதன் மேலே உட்கார்வதாக அமையாது, எனினும் ஊர் வழக்காற்றில் அது அவமதிப்பாகப் பார்க்கப்பட்டால் அவ்வாறு செய்வது கூடாது. ஏனெனில் இங்கு முக்கியம் மக்கள் பார்வைதான். இது அனுமதிக்கப்பட்டிருந்தாலும் மக்கள் மத்தியில் அவமதிப்பாகப் பார்க்கப்பட்டால் அதனைத் தவிர்ந்து கொள்வது அவசியமாகும்.

التصنيفات

வணக்க வழிபாடுகளில் ஏகத்துவம், தொழுகையின் நிபந்தனைகள்