அல்லாஹ் (ஒருவர் செய்யும்) நல்ல செயல்களையும், தீய செயல்களையும் எழுதிக் கொள்கிறான். அதற்கு மேல் அவன் அதனை…

அல்லாஹ் (ஒருவர் செய்யும்) நல்ல செயல்களையும், தீய செயல்களையும் எழுதிக் கொள்கிறான். அதற்கு மேல் அவன் அதனை விளக்கியும் இருக்கிறான். ஒருவர் நல்ல செயலை செய்ய நினைத்து அதை செய்து முடிக்க முடியாவிட்டாலும் அல்லாஹ் அதை ஒரு முழுமையான நல்ல செயலாக எழுதிக் கொள்கின்றான். ஒருவர் ஒரு நல்ல செயலைச் செய்ய நினைத்து, அதைச் செய்தும் முடிப்பாரேயானால் அல்லாஹ் அதை பத்து முதல் எழுநூறு தடவை அல்லது அதற்கும் பன்மடங்கு அதிகமானதாக குறித்துக் கொள்கிறான்.

அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறியதை இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள் : அல்லாஹ் (ஒருவர் செய்யும்) நல்ல செயல்களையும், தீய செயல்களையும் எழுதிக் கொள்கிறான். அதற்கு மேல் அவன் அதனை விளக்கியும் இருக்கிறான். ஒருவர் நல்ல செயலை செய்ய நினைத்து அதை செய்து முடிக்க முடியாவிட்டாலும் அல்லாஹ் அதை ஒரு முழுமையான நல்ல செயலாக எழுதிக் கொள்கின்றான். ஒருவர் ஒரு நல்ல செயலைச் செய்ய நினைத்து, அதைச் செய்தும் முடிப்பாரேயானால் அல்லாஹ் அதை பத்து முதல் எழுநூறு தடவை அல்லது அதற்கும் பன்மடங்கு அதிகமானதாக குறித்துக் கொள்கிறான். ஒருவர் ஒருதீய செயலைச் செய்ய நினைத்து, அதை அவர் செய்யவில்லை என்றால் அல்லாஹ் அதை ஒரு நல்ல செயலாகவே எழுதிக் கொள்கின்றான். ஒருவர் ஒரு தீய செயலைச் செய்ய நினைத்து, அதை செய்தும் முடித்தால் அல்லாஹ் அதை ஒரு தீய செயலாக மட்டுமே எழுதிக் கொள்கின்றான். முஸ்லிமின் அறிவிப்பில் : “அல்லாஹ்வின் திட்டப்படி அழியக் கூடியவர் தான் அழிந்து போவார்” என மேலதிக வார்த்தை உள்ளது.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

ஒரு நன்மையைச் செய்யும் ஆவலுடன் அதற்காக எத்தனிப்பது அதனைச் செய்யாவிட்டாலும் நன்மையாகப் பதியப்படுகின்றது, அதனைச் செய்தால் பத்து முதல் பன் மடங்காக அது பெருக்கப்படுகின்றது என்ற செய்தி இந்த மகத்தான நபிமொழியில் கூறப்பட்டுள்ளது. மேலும் ஒரு பாவத்தை செய்ய எத்தனித்து அதனை அல்லாஹ்வுக்காகச் செய்யாமல் விட்டால் அதுவும் ஒரு நன்மையாகப் பதியப்படுகின்றது. ஒரு பாவத்தைச் செய்தால் அது ஒரு பாவமாகவே எழுதப்படுகின்றது, பாவம் செய்ய எத்தனித்து விட்டு, பின் செய்யாமல் விட்டால் அவனுக்கு எதுவும் எழுதப்பட மாட்டாது. மேற்கண்ட அனைத்தும் அல்லாஹ்வுடைய அருளின் விசாலத்தையே காட்டுகின்றது. இந்த மகத்தான சிறப்பாலும், பாரிய நலவாலும் தனது அடியார்களுக்கு அவன் உபகாரம் புரிந்துள்ளான்.

فوائد الحديث

இச்சமூகத்திற்கு அல்லாஹ் செய்துள்ள பேருபகாரம் இங்கு தெளிபடுத்தப்பட்டுள்ளது, இந்நபிமொழியில் கூறப்பட்ட விடயம் இல்லாவிடில் சோதனை பெரிதாகி இருக்கும். ஏனெனில் அடியார்கள் செய்யும் பாவமே அதிகமானது.

எழுதக்கூடிய வானவர்கள் வெளிப்படையான அமல்களை மாத்திரம்தான் எழுதுவார்கள் எனக் கூறுவோரின் கருத்துக்கு மாற்றமாக உள்ளம் சார்ந்த அமல்களையும் எழுதுகின்றார்கள் என்பது இங்கு உறுதியாகின்றது.

நன்மைகள், தீமைகள் பற்றி அவை நிகழ்தல், அவற்றுக்காக கூலி, தண்டனை வழங்கப்படல் என மூன்று விடயங்களும் எழுதப்படுகின்றன. அல்லாஹ் (ஒருவர் செய்யும்) நல்ல செயல்களையும், தீய செயல்களையும் எழுதிக் கொள்கிறான் என பொதுவாகவே நபிமொழியில் இடம்பெற்றுள்ளது.

நிகழும் நன்மை, தீமைகள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு, எழுதப்பட்டு, ஸ்திர நிலையை அடைந்து விட்டது, அடியார்கள் தம்மீது எழுதப்பட்ட விதிப்படியே அவர்களுடைய நாட்டத்துடன் செயல்படுகின்றனர்.

"எழுதி விட்டான்" என்ற வார்த்தையின் மூலம் அல்லாஹ்வின் செயல்களை உறுதிப்படுத்துகின்றது, அவன் எழுதும்படி பணித்திருக்கவும் கூடும், பிற நபிமொழிகளில் இடம்பெற்றிருப்பது போன்று தானே எழுதியிருக்கவும் கூடும், நபியவர்கள் கூறினார்கள் : "தவ்ராதைத் தனது கரத்தினால் எழுதினான்", இதனை உவமைப்படுத்தாமல், மாற்றுக்கருத்துக் கொடுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மார்க்க அடிப்படையிலும், விதிப்படியும் படைப்பினங்களுடைய நன்மை, தீமைகளை எழுதியிருப்பதன் மூலம் அவர்கள் மீது அல்லாஹ் எடுத்துள்ள கரிசனை புலப்படுகின்றது.

செயல்களில் எண்ணங்களை கணிக்கப்படும் விதம், அதன் தாக்கம் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொதுவாக ஒன்றைக் கூறிவிட்டு பின் அதனை விரிவாகக் கூறுவது அணியிலக்கனத்தின் முக்கிய அம்சமாகும்.

நன்மையை செய்ய எத்தனிப்பதனாலும் முழுமையான நன்மை எழுதப்படுகின்றது.

நன்மை செய்ய எத்தனித்து, அதனை செய்யாவிட்டாலும் அதனை அல்லாஹ் ஒரு நன்மையாகப் பதிகின்றான், பாவம் செய்ய எத்தனித்து, அதனை அல்லாஹ்வுக்காக விட்டால் அதனையும் அவன் ஒரு நன்மையாகவே பதிகின்றான் என்பது அல்லாஹ்வின் சிறப்பு, மென்மை, உபகாரம் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இங்கு எத்தனிப்பது என்பது வெறும் ஊசலாட்டமன்றி, உறுதி கொள்வதாகும்.

التصنيفات

இறைதிருநாமங்கள் மற்றும் பண்புகளில் ஏகத்துவம்