إعدادات العرض
'நிச்சயமாக அல்லாஹ் என் சமூகத்தாரிடத்தில்; தவறுதலாக ஏற்படக் கூடியதையும் மறதியாக ஏற்படக்கூடியதையும் இன்னும்…
'நிச்சயமாக அல்லாஹ் என் சமூகத்தாரிடத்தில்; தவறுதலாக ஏற்படக் கூடியதையும் மறதியாக ஏற்படக்கூடியதையும் இன்னும் நிர்பந்தமாக நிகழக்கூடிவற்றையும் எனக்காக மன்னித்து விடுகிறான்'
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் : 'நிச்சயமாக அல்லாஹ் என் சமூகத்தாரிடத்தில்; தவறுதலாக ஏற்படக் கூடியதையும் மறதியாக ஏற்படக்கூடியதையும் இன்னும் நிர்பந்தமாக நிகழக்கூடிவற்றையும் எனக்காக மன்னித்து விடுகிறான்'.
الترجمة
العربية বাংলা Bosanski English Español فارسی Français Bahasa Indonesia Русский Tagalog Türkçe اردو 中文 हिन्दी ئۇيغۇرچە Hausa Kurdî Kiswahili Português සිංහල دری অসমীয়া پښتو O‘zbek Tiếng Việt Македонски ភាសាខ្មែរ ਪੰਜਾਬੀ తెలుగు ไทย Moore አማርኛ Magyar Azərbaycan ქართული ಕನ್ನಡ Yorùbá ગુજરાતી Українська Shqip Кыргызча Српски Kinyarwanda тоҷикӣ Wolof Čeština Bambara नेपाली മലയാളം kmr msالشرح
அல்லாஹ் தனது சமூகத்திற்கு பின்வரும் மூன்று நிலைகளில் மன்னிப்பை வழங்குகிறான் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள் : முதாலாவது : தவறுதலாக நிகழ்ந்த செயல். அதாவது மனமுரண்டாக அல்லாது தவறுதலாக வெளிப்பட்ட ஒருவிடயம். உதாரணத்திற்கு ஒருவர் ஏதாவது ஒருவிடயத்தை செய்ய விரும்புகிறார். அவ்வேளை அவர் செய்ய விரும்பாத ஒரு செயல் நிகழ்ந்து விடுகிறது. இவ்வாறான தவறை அல்லாஹ் மன்னிக்கிறான். இரண்டாவது : மறதி : அதாவது சுயநினைவுடன் ஒன்றை செய்ய வேண்டும் என நினைக்கிறார். ஆனால் அவர் அதனை செய்யும் போது மறந்து விடுகிறார் இதற்கும் எவ்விதப்பாவமுமில்லை. மூன்றாவது: நிர்ப்பந்தம் : தடுப்பதற்கு சக்திபெறாத நிலையில் ஒரு பாவமான விடயத்தை செய்யுமாறு ஒருவர் நிர்ப்பந்திக்கப்படுகிறார். இவ்வாறான நிலையில் அவரின் மீது எவ்விதப்ப பாவமும் கிடையாது. இந்த ஹதீஸின் உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை தடைசெய்யப்பட்ட ஒரு விடயத்தில் அல்லாஹ்வுக்கும் அடியானுக்கிடையிலான தொடர்பை குறிப்பிடுகிறது. ஒரு நபர் கட்டளையிடப்பட்ட ஒன்றைச் செய்ய மறந்து விட்டால், அந்தக் கட்டளையிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்படமாட்டாது. இருப்பினும், அவ்வாறு மறதியாக செய்ததன் விளைவாக ஒரு குற்றம் நிகழ்ந்தால், மனிதர்களுடன் தொடர்ப்பான உரிமையா இருப்பின் அவ்வுரிமையிலிருந்து விலக்கு அளிக்கப் படமாட்டாது. அதாவது ஒருவர் தவறுதலாகக் கொல்லப்பட்டால், அவர் 'தியா' கொலைக்கான இழப்பீடு செலுத்த வேண்டும், அல்லது தவறுதலாக ஒரு காரை சேதப்படுத்தினால், அவர் இழப்பீடு செலுத்த வேண்டும்.فوائد الحديث
அடியார்களிடத்தில் மூன்று சந்தர்ப்பங்களில் ஏற்படும் பாவத்தை அல்லாஹ் மன்னிப்பது தனது அடியார்கள் மீது கொண்டிருக்கும் இரக்கத்திற்கும் கருணையின் விசாலத்திற்கும் சான்றாக உள்ளது.
நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீதும் அவர்களது சமூகத்தார் மீதான அல்லாஹ்வின் பேரருள்.
குற்றமில்லை என்பதன் பொருள் குறித்த கடமை நீக்கப்பட்டது என்பது பொருளலல்ல. உதாரணத்திற்கு ஒருவர் வுழு செய்ய மறந்துவிட்டார், அவர் தான் வுழுவுடன் இருப்பதாக நினைத்து தொழுது விட்டார், ஆனால் அவரின் மீது எவ்விதக் குற்றமுமில்லை. ஆனால் அவர் வுழு செய்து மீண்டும் தொழுவது கடமையாகும்.
நிர்ப்பந்த நிலையில் ஒரு தடைசெய்யப்பட்ட ஒன்றை செய்வது அவரின் பாவத்தை நீக்கவேண்டுமென்றிருந்தால்; அதற்குரிய நிபந்தனையை முழுமையாக பெற்றிருத்தல் வேண்டும். அவ்வாறு குறித்த நிபந்தனைகளின்றி அவரின் பாவத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கப் படமாட்டாது. உதாரணத்திற்கு நிர்பந்திப்பவர் அவர் நிர்ப்ந்திக்கும் விடயத்தை செய்யாது விட்டால் அதனை நிறைவேற்றுவதற்குரிய பலத்தை பெற்றிருப்பது ஒரு நிபந்தனையாகும்.
