إعدادات العرض
"எனது அடியான் என்னைப் பற்றி எண்ணுகின்ற பிரகாரம் நான் இருப்பேன்.எனவே அவன் எங்கு என்னை நினைவு படுத்துகின்றானோ…
"எனது அடியான் என்னைப் பற்றி எண்ணுகின்ற பிரகாரம் நான் இருப்பேன்.எனவே அவன் எங்கு என்னை நினைவு படுத்துகின்றானோ அங்கு அவனுடன் நான் இருப்பேன்"என்று அல்லாஹ் கூறினான்.
"எனது அடியான் என்னைப் பற்றி எண்ணுகின்ற பிரகாரம் நான் இருப்பேன்.எனவே அவன் எங்கு என்னை நினைவு படுத்துகின்றானோ அங்கு அவனுடன் நான் இருப்பேன்"என்று அல்லாஹ் கூறினான்.என்றும்,மேலும் அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களில் ஒருவரின் பொருள் பாலைவணதில் வைத்து தெலைந்து விட்டது என்றால்,மீண்டும் அப்பொருள் அவனுக்குக் கிடைத்து விடும் பட்சத்தில் அவன் அடையும் சந்தோசத்தை விடவும் தன் அடியான் தன்னிடம் கேட்கும் பாவமன்னிப்பையிட்டு அல்லாஹ் அதிகமாக மகிழ்ச்சியடைகின்றான்"என்றும் ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றாரர்கள்
[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]
الترجمة
العربية বাংলা Bosanski English Español فارسی Bahasa Indonesia Tagalog Türkçe اردو 中文 हिन्दी Français Tiếng Việt සිංහල Hausa Kurdî Kiswahili Português Русский Nederlands অসমীয়া ગુજરાતી አማርኛ پښتو ไทย മലയാളം नेपालीالشرح
நிச்சயமாக அடியான் அல்லாஹ்வைப் பற்றி எப்படி எண்ணுகிரானோ அதன் பிரகாரம் அவன்இ ருப்பான்,எனும் போது அல்லாஹ் தனக்கு நல்லதைத் தருவான் என்று அடியான் நல்லபடி நினைத்தால் அல்லாஹ் அவனின் எண்ணத்தை நிறைவு செய்து கொடுப்பான்.என்பதே அதன் கருத்தாகும்.மேலும் "எனது அடியான் என்னைப் பற்றி எப்படி எண்ணுகிறானோ அதன் பிரகாரம் நான் இருப்பேன்.எனவே என்னைப் பற்றி நல்லபடி அவன் நினைத்தால் அது அவனுக்குக் கிடைக்கும்,இன்னும் அவன் தீமையை நினைத்தால் அதுதான் அவனுக்குக் கிடைக்கும்"என்று அல்லாஹ் கூறினான் என ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள் என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸ்,முஸ்னத் இமாம் அஹ்மதில் பதிவாகியுள்ளது.இதனை"ஸஹீஹ் அல்ஜாமிஃ"என்ற கிரந்தத்தில் அல்பானீ அவர்கள் சரி கண்டுள்ளார்கள்.(2/795)இல(4315) எனினும் அல்லாஹ் நல்லதைச் செய்வான் என்று எந்த சந்தர்ப்பத்தில் நினைக்கலாம்?என்றால்,அல்லாஹ்வின் அருளைச் சாத்தியப் படுத்தும்படியான மற்றும் அதனை அவனிடம் எதிர்பாரக்க இயலுமான நல்ல கருமங்களைச் செய்யும் போதுதான்.அபபோது அல்லாஹ் இந்த நற்கருமங்களை ஏற்றுக் கொண்டு அதற்கு நற்கூலி வழங்குவான் என அவன் நல்லெண்ணம் கொள்ளல் வேண்டும் எனினும் நல்லமல் எதுவும் செய்யாமல் அல்லாஹ் தனக்கு நல்லதைத் தருவான் என்று அவன் மீது நல்லெண்ணம் கொள்வதானது வீண் நம்பிக்கையாகும்.எனவே எவனாகிலும் நற்கருமம் எதனனையும் செய்யாமல் தன் மனோ இச்சைப்படி நடந்து கொண்டு அல்லாஹ் தனக்கு நல்லதைச் செய்வான் என்று வீணாக நம்பிக்கை கொள்வானாகில் அதனால் அவனுக்கு எந்தப் பயனும் கிட்டாது.எனவே நீ மிக மும்முரமாகப் பாவ காரியங்களைச் செய்து கொண்டு அல்லாஹ் உனக்கு நல்லதைத் தருவான் என்று நீ நினைப்பதானது மூலதனமில்லாமல் இலாபத்தை எதிர்பார்க்கும் தகுதியற்றவனின் செயலாகும்.மேலும் "நல்லமல்கள் செய்யும் போதுதான் நல்லெண்ணம் அமையப் பெறல் வேண்டும் என்பதில் ஐயமில்லை.எனவே நன்மை செய்கின்றவன் அல்லாஹ் தான் செய்த நல்ல கருமத்திற்காக நற்கூலி தருவான்,அவன் தனது வாக்கிற்கு மாறு செய்ய மாட்டான்,தனது பாவமன்னிப்பை ஏற்றுக் கொள்வான் என்று அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொள்வானாகில் அல்லாஹ் அவனின் எண்ணத்தை நிறைவேற்றி வைப்பான்.ஆனால் தன் எஜமானனுக்குக்.கட்டுப்படாது அவனை விட்டும் ஓடிப்போன ஒரு அடிமை எவ்வாறு தன் எஜமானன் மீது நல்லெண்ணம் கொள்ள இயலாதோ,அது போன்று பெரும் பாவங்கள்,அநியாயம்,ஷரீஆவுக்கு முரனான காரியங்களில் பிடிவாதமாக ஈடுபட்டு வரும் பாவியைப் பொருத்த மட்டில் அந்தப் பாவ காரியங்களும்,அநியாயங்களும்,ஹராமான கருமங்களும் அவன் தன் இரட்சகன் மீது நல்லெண்ணம் கொள்ளத் தடையாக அமைந்து விடுகின்றது மேலும் தீய காரியமும்,நல்லெண்ணமும் ஒன்று சேர மாட்டாது.எனவே தீமை செய்தவன் அவனின் தீமையின் அளவுக்குத் தக்கபடி அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொள்வதை விட்டும் விலகியிருப்பான்.மேலும் அல்லாஹ்வுக்கு மிகவும் வழிப்பட்டு நடக்கின்றவனே அவன் மீது மிகவும் நல்லெண்ணம் கொண்டவனாக இருப்பான்" என்று இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.மேலும் முஃமினான அடியான் அல்லஹ்வின் மீது நல்லெண்ணம் கொண்டவனாக இருக்கின்ற படியால் அவன் நலலமல்களைச் செய்கிறான்.ஆனால் பாவி அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொள்ளாதபடியால் அவன் தீய கருமங்களைச் செய்கின்றான்" என்று ஹஸனுல் பஸரீ (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.அதனைத் தொடர்ந்து "தன் அடியான் தன்னிடம் வேண்டும் பாவ மன்னிப்பையிட்டு அல்லாஹ் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றான்"என்று குறிப்பிட்டுள்ளார்கள்.மேலும் அல்லாஹ் தன் அடியானை விடவும் அருளாளன்.எனவேதான் மனிதன் அவனிடம் ஒரு சான் நெருங்கி வருங்கால்,அவன் அவனிடம் ஒரு முலம் நெருங்கியும்,அவன் அவனிடம் ஒரு முலம் நெருங்கி வருங்கால் அவன் அவனிடம் ஒரு பாகம் நெருங்கியும் வருகின்றான் என்றும்,அடியான் அவனிடம் நடந்து வருங்கால் அவன் அவனிடம் ஓடியும் வருகின்றான்.என்று குறிப்பிடப் பட்டுளளதானது,அல்லாஹ் தன் அடியான் மீது மிகவும் கிருபையுள்ளவனாகவும்,அவனின் வேண்டுதலைத் தீவிரமாக ஏற்றுக் கொள்கின்றவனாகவும் இருக்கின்றான் என்பதை எடுத்துக் காட்டுகின்றது என்று ஹஸனுல் பஸரீ (ரஹ்) அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளார்கள்.இந்த ஹதீஸில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் யாவும் அல்லாஹ்வைப் பொருத்த மட்டில் வாஸ்த்துவமானவையே ஈமானுடைய விடயத்தில் அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினர் ஏற்று ஈமான் கொள்கின்ற ஹதீஸ்களில்.இதுவும் ஒன்றாகும்.எனினும் எவ்வாறு அல்லாஹ் ஓடுகிறான்,எவ்வாறு அவன் அடியானிடம் நெருங்கி வருகின்றான் என்ற முறையை நாம் அறிந்து கொள்ள முடியாது அது பற்றிய அறிவை அல்லாஹ்வின் பக்கம் சாட்டிவிடல் வேண்டும்.எனவே அது பற்றிப் பேசுவதற்கு எமக்கு உரிமையில்லை.எனினும்'அதன் பொருள் மீது நாம் விசுவாசம் கொண்டு அதன் தன்மையயை அல்லாஹ்வின் பக்கம் சாட்டி விடுவதே நமது கடமை. மேலும் அல்லாஹ் தன் அடியானுடன் இருத்தல் என்பது இரு வகைப்படும்,ஒன்று தனிப்பட்டதாகும்.அதுதான் ஹதீஸில் குறிப்பிட்டுள்ளபடி அடியானுக்கு அல்லாஹ்வின் உதவியும் ஆதரவும் என்றும் உண்டென்பதாகும்.மற்றொன்று பொதுவானது.அதுதான் அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாகவும்,அனைத்தையும் சூழ்ந்து கொண்டவனாகவும் இருக்கின்றான்.என்பதாகும்.இது அல்லாஹ்வுக்குள்ள மிகவும் பொருத்தமானதும்,உன்மயைானதமான ஒரு பண்பாகும்.