(தாகூத்கள்") சிலைகள் மீதோ உங்களின் பெற்றோர்களின் மீதோ நீங்கள் சத்தியம் செய்ய வேண்டாம்

(தாகூத்கள்") சிலைகள் மீதோ உங்களின் பெற்றோர்களின் மீதோ நீங்கள் சத்தியம் செய்ய வேண்டாம்

அல்லாஹ்வின் தூதர் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு ஸமுரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : "(தாகூத்கள்") சிலைகள் மீதோ உங்களின் பெற்றோர்களின் மீதோ நீங்கள் சத்தியம் செய்ய வேண்டாம்.

[சரியானது] [இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் 'தவாகி'க்கள் மீது சத்தியம் செய்வதைத் தடை செய்கிறார்கள். 'தவாகி' என்பது 'தகியா'.என்ற ஒருமைச் சொல்லின் பன்மையாகும். இச்சொல்லானது, அல்லாஹ்வுக்குப்பதிலாக இணைவைப்பாளர்கள் வணங்கிய ஜாஹிலிய்யாக் கால சிலைகளைக் குறிக்கும். இதுவே அவர்களின் அத்துமீறல்களுக்கும் சத்தியத்தை நிராகரிப்பதற்கும் காரணமாக அமைந்தன. அதேபோல மூதாதையர்களின் மீது சத்தியம் செய்வதை தடை செய்துள்ளார்கள். ஏனென்றால் இஸ்லாத்திற்கு முந்தைய காலமான ஜாஹிலியயாக் காலத்தில், அரேபியர்கள் தங்கள் மூதாதையர் மீது பெருமை மற்றும் மரியாதையின் நிமித்தம் சத்தியம் செய்து வந்தனர்.

فوائد الحديث

அல்லாஹ்வின் மீதும், அவனது பெயர்கள் மற்றும் பண்புகளின் மீதும் மாத்திரமே சத்தியம் செய்வது அனுமதிக்கப்படும்.

தாகூத்துகள்; (போலிக் கடவுள்கள்), மூதாதையர்கள், தலைவர்கள், சிலைகள் மற்றும் இது போன்ற பொய்யான விடயங்களைக் கொண்டு சத்தியம் செய்வது (ஹராம்) தடைசெய்யப்பட்டதாகும்.

அல்லாஹ் அல்லாத ஒருவரைக் கொண்டு சத்தியம் செய்வது சிறியவகை ஷிர்க் (இணைவைப்பு) ஆகும், சத்தியம் செய்யும் பொருளை உள்ளத்தால் அல்லாஹ்வை மகத்துவப் படுத்துவது போலவே மகத்துவப்படுத்தி, அல்லது அதில் வணக்கத்திற்குரிய ஒரு விடயம் இருப்பதாக நம்பினால்; அது பெரியவகை ஷிர்க்காக மாறிவிடும்.

التصنيفات

வணக்க வழிபாடுகளில் ஏகத்துவம்