"எல்லை மீறுபவர்கள் அழிந்தனர்" என்று மூன்று முறை கூறினார்கள்.

"எல்லை மீறுபவர்கள் அழிந்தனர்" என்று மூன்று முறை கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: "எல்லை மீறுபவர்கள் அழிந்தனர்" இவ்வாறு மூன்று முறை கூறினார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

ஒன்றில் ஆழமாகச் சென்று, அளவு கடந்து செல்வது அழிவிற்குக் காரணமாகி விடுமென நபியவர்கள் தெளிவு படுத்துகின்றார்கள். இதலிருந்து தடுப்பதே அன்னாரின் நோக்கமாகும். சோர்வு ஏற்படும் வரை வணக்கத்தில் திளைத்திருந்து, பின்னர் விட்டுவிடுதல், பேச்சில் எல்லைமீறி ஆழமாகச் செல்லல் போன்றனவும் இதில் அடங்கும். இணைவைப்பிற்கு இட்டுச் செல்லும் அளவிற்கு நல்லடியார்களை மகத்துவப்படுத்துவதில் அளவு கடந்து செல்வதே எல்லை மீறலில் கடுமையாக எச்சரிக்கப்பட வேண்டிய, பாரிய விடயமாகும்.

فوائد الحديث

அனைத்து விடயங்களிலும் எல்லை மீறிச் செய்வதைத் தவிர்ந்து கொள்ளல், குறிப்பாக வணக்கங்கள், நல்லடியார்களை மதித்தல் போன்றவற்றில் தவிர்ந்து கொள்வதை ஊக்குவித்துள்ளது.

தனது சமூகத்தினரின் பாதுகாப்பின் மீது நபியவர்கள் கொண்ட அக்கறையும், அதனை எத்தி வைக்க அவர்கள் எடுத்துக் கொண்ட பிரயத்தனமும் இங்கு தெளிவாகின்றது.

அனைத்து விடயங்களிலும் எல்லை மீறுவது ஹராமாகும்.

முக்கியமான விடயங்களை வலியுறுத்திக் கூறுவது விரும்பத்தக்கதாகும்.

அனைத்திலும் நடுநிலையைக் கடைபிடிக்கத் தூண்டுதல்.

இஸ்லாத்திலுள்ள தாராளத்தன்மை மற்றும் இலகு இங்கு புலனாகின்றது.

التصنيفات

வணக்க வழிபாடுகளில் ஏகத்துவம், வணக்க வழிபாடுகளில் ஏகத்துவம்