'தன் உள்ளத்தினால் உண்மையான எண்ணத்துடன் வணங்கி வழிபடுவதற்குரிய உண்மையான இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு…

'தன் உள்ளத்தினால் உண்மையான எண்ணத்துடன் வணங்கி வழிபடுவதற்குரிய உண்மையான இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் உறுதியாக நம்பும் எவரையும் அல்லாஹ் நரகத்திற்குச் செல்லவதை தடுக்கிறான்'

அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'ஒரே வாகனத்தின் மீது முஆத் (ரழியல்லாஹு அன்ஹு )அவர்கள் நபி ஸல்லல்லாஹு அiலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னே அமர்ந்திருக்கும் நிலையில், நபியவர்கள் 'முஆதே! என்று அழைத்தார்கள். 'இதோ உள்ளேன் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! (கட்டுப்படுவதைப்) பெரும் பேறாகவும் கருதுகிறேன்' என்று முஆத் ரழியல்லாஹு அன்ஹு கூறினார். முஆதே!' என்று என மீண்டும் நபி ஸல்லல்லாஹு அiலைஹிவஸல்லம் அவர்கள் அழைத்தார்கள். 'இதோ உள்ளேன் இறைத்தூதர் அவர்களே! (கட்டுப்படுவதைப்) பெரும் பேறாகவும் கருதுகிறேன்' என மீண்டும் முஆத் (ரழியல்லாஹு அன்ஹு கூறினார். இவ்வாறு மூன்று முறை கூறி அழைத்தார்கள். பிறகு 'தன் உள்ளத்தினால் உண்மையான எண்ணத்துடன் வணங்கி வழிபடுவதற்குரிய உண்மையான இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் உறுதியாக நம்பும் எவரையும் அல்லாஹ் நரகத்திற்குச் செல்லவதை தடுக்கிறான்' என்று நபி ஸல்லல்லாஹு அiலைஹிவஸல்லம அவர்கள் கூறினார்கள். அப்போது 'இறைத்தூதர் அவர்களே! இச்செய்தியை நான் மக்களுக்கு அறிவித்து விடட்டுமா? அவர்கள் மகிழ்ந்து போவார்களே!' என்று முஆத் கேட்டதற்கு 'அவ்வாறு நீர் அறிவிக்கும் அச்சமயத்தில் (இது மட்டும் போதுமே என்று) அவர்கள் அசட்டையாக இருந்துவிடுவார்கள்' என நபியவர்கள் கூறினார்கள். இருப்பினும் மார்க்க அறிவை மறைத்த குற்றத்திற்கு ஆளாகாமலிருப் பதற்காக முஆத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது இறுதிக் காலத்தில் இதனை அறிவித்தார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வாகனத்தின் மீது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பின் அமர்ந்திருந்தார்கள் அப்போது நபியவர்கள் தான் கூறுப் போகும் விடயத்தின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்த 'முஆதே!' என மூன்று தடவை அழைத்தார்கள். ஓவ்வொரு தடவையும் நபியவர்கள் அழைக்கும் போதெல்லாம் அல்லாஹ்வின் தூதரே! அப்படியே ஆகட்டும், அல்லாஹ்வின் தூதரே உங்கள் அழைப்பை ஏற்றுக்கொண்டு உங்களுக்கு கட்டுப்பட்டவனாக உள்ளேன். உங்களுக்கு கட்டுப்படுவதினால் நான் மகிழ்ச்சியை தேடுகிறேன் என்று கூறிக்கொண்டிருந்தார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் யார் ஒருவர் உண்மையாக வணங்கப்படத்தக்கவன் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லையென்றும், முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்றும் பொய்யாக அல்லாமல் உள்ளத்தாள் உண்மைப் படுத்தியவராக சாட்சி கூறி அதே நிலமையில் மரணிக்கிறாரோ அவர் மீது நரகத்தை ஹராமாக்கி விடுகிறான் என்று இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். இவ்வாறு நபியவர்கள் கூறவே முஆத் ரழியல்லாஹு அன்ஹு; இந்த செய்தியை மக்களி டம் அவர்கள் மகிழ்ச்சியடையவும், நல்ல சுபச் செய்தியாக அமைந்துவிடவும் இதனை நான் அறிவிக்கட்டுமா எனக் கேட்டார்கள். நபியவர்கள் மக்கள் இதிலேயே நம்பிக்கொண்டு அலட்சியமாக இருந்து அவர்களின் அமல்களெல்லாம் குறைந்து விடும் என அஞ்சினார்கள். எனவே முஆத் அவர்களும் அறிவை மறைத்த குற்றத்திற்கு உட்பட்டு விடுவதைப் பயந்து தனது மரணத்திற்கு முன்தான் இந்த ஹதீஸை அவர்கள் கூறினார்கள்.

فوائد الحديث

தனது வாகனத்தில் தனக்குப்பின்னால் முஆத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை ஏற்றிச்சென்ற நபி ஸல்லல்லாஹு அவர்களின் பணிவு பிரதிபளிக்கின்றமை.

தான் கூறும் விடயத்தில்; கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக முஆத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை பல தடவைகள் அழைத்ததின் மூலம் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லாம் அவர்களின் கற்பித்தல் முறை தெளிவுபடுத்தப் பட்டுள்ளமை.

'லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்த்துர் ரஸுலுல்லாஹ்' என சான்று பகர்வதற்கான நிபந்தனைகளில் ஒன்றாக, இந்தக் கலிமாவை கூறுபவர் உண்மையாளராகவும், பெய்யோ அல்லது சந்தேகமோ இன்றி உறுதியான நம்பிக்கையுடனும் கூறுபவராக இருத்தல் வேண்டும் என்பதைக் குறிப்பிடப்பட்டுள்ளமை.

ஓரிறைக் கொள்கையுடன் மரணித்தவர்கள் நரகில் நிரந்தரமாக்கப்பட மாட்டார்கள். தாம் செய்த சில பாவங்களுக்காக அங்கு சென்றாலும் தூய்மையடைந்து மீண்டும் வெளியேறி விடுவார்கள்.

இரு ஷஹாதாக் கலிமாக்களையும் உண்மையாக கூறியவரின் சிறப்பு கூறப்பட்டுள்ளமை.

விபரீதம் ஏற்படும் என்ற நிலை இருந்தால் சில செய்திகளை சில நிலமைகளில் கூறாது இருந்து விடலாம்.

التصنيفات

பரிபாலித்தல் விடயத்தில் ஏகத்துவம், ஏகத்துவத்தின் மகிமைகள்