,ஷைத்தானின் சூழ்ச்சியை மனக்குழப்பமாக மாற்றிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்று கூறினார்கள்

,ஷைத்தானின் சூழ்ச்சியை மனக்குழப்பமாக மாற்றிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்று கூறினார்கள்

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து கூறினார்: 'அல்லாஹ்வின் தூதரே, -ஒருவிடயத்தை மறைமுகமாக சுட்டிக்காட்டி- எம்மில் ஒருவருக்கு இது போன்ற எண்ணங்கள் ஏற்படுகின்றன - அவர் அது பற்றி பேசுவதை விட நெருப்புக் கனலாக இருக்க விரும்புகிறார்', அப்போது நபியவர்கள் 'அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன்,ஷைத்தானின் சூழ்ச்சியை மனக்குழப்பமாக மாற்றிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்று கூறினார்கள்.

[ஸஹீஹானது-சரியானது]

الشرح

ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து கூறினார்: 'அல்லாஹ்வின் தூதரே, - எம்மில் ஒருவருக்கு உள்ளத்தில் ஒரு வகையான எண்ணங்கள் ஏற்படுகின்றன.அது பற்றி பேசுவது மிகப்பாரதூரமானது.; அது பற்றி பேசுவதை விட நெருப்புக் கனலாக இருப்பதே மேல் என்று கூறுகிறார். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரண்டு தடவைகள் தக்பீர் கூறி ஷைத்தானின் திட்டத்தை-சூழ்ச்சியை வெறும் மனஊசலாட்டமாக மாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் எனக் கூறினார்கள்.

فوائد الحديث

ஷைத்தான், மனஊசலாட்டத்தின் மூலம் முஃமின்களை ஈமானிலிருந்து இறைநிராகரிப்பின் பால் மீட்டெடுக்க எப்போதும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தவனாக உள்ளான் என்பதை தெளிவுபடுத்தல்.

முஃமின்களுக்கு ஷைத்தானால் மனஊசலாட்டத்தை தவிர வேறு எதையும் செய்ய முடியாது என்ற ஷைத்தானின் பலவீனத்தை தெளிவுபடுத்துதல்.

முஃமினைப் பொறுத்தவரை ஷைத்தானின் ஊசலாட்டங்களை புறக்கணித்து அதனைத் தடுத்துக்கொள்ளுதல் அவசியமாகும்.

நல்ல விடயங்கள் அல்லது ஆச்சரியப்படத்தக்க விவகாரங்கள்,அல்லது இதையொத்த விடயங்களின் போது தக்பீர்முழங்குதல் அனுமதிக்கப்பட்டவிடயமாகும்.

மார்க்கம் குறித்து பிரச்சினைக்குரிய, தெளிவற்ற விடயங்கள் பற்றி ஒரு முஸ்லிம் அறிஞரிடம் கேட்டுத் தெளிவு பெறுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விடயமாகும்.

التصنيفات

வல்லமையும் கீர்த்தியும் மிக்க அல்லாஹ்வின் மீது விசுவாசம் கொள்ளல்., ஜின்