தங்களுக்குப் பிறகு இஸ்லாத்தைப் பற்றி எவரிடமும் கேட்டகத் தேவையில்லாத அளவு எனக்கு இஸ்லாத்தைப் பற்றிக்…

தங்களுக்குப் பிறகு இஸ்லாத்தைப் பற்றி எவரிடமும் கேட்டகத் தேவையில்லாத அளவு எனக்கு இஸ்லாத்தைப் பற்றிக் கூறுங்கள் எனக் கேட்டேன். அதற்கு நபியவர்கள்: அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொண்டேன் எனக் கூறி அதிலேயே உறுதியாக நிலைத்திருப்பீராக எனக் கூறினார்கள்

ஸுப்யான் இப்னு அப்துல்லாஹ் அஸ்ஸகபி ரழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்: நான் அல்லாஹ்வின் தூதரிடம் : அல்லாஹ்வின் தூதரே தங்களுக்குப் பிறகு இஸ்லாத்தைப் பற்றி எவரிடமும் கேட்டகத் தேவையில்லாத அளவு எனக்கு இஸ்லாத்தைப் பற்றிக் கூறுங்கள் எனக் கேட்டேன். அதற்கு நபியவர்கள்: அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொண்டேன் எனக் கூறி அதிலேயே உறுதியாக நிலைத்திருப்பீராக எனக் கூறினார்கள்.

[ஸஹீஹானது-சரியானது]

الشرح

நபித்தோழர் ஸுப்யான் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தாம் கடைப்பிடித்தொழுகுவதற்கு இஸ்லாத்தின் கருத்துக்கள் யாவும் பொதிந்துள்ள, அது குறித்து வேறு யாரிடமும் கேட்பதற்கு அவசியமற்ற ஒரு கூற்றை சொல்லித் தருமாறு வேண்டினார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், அவரிடம் : நான் அல்லாஹ் ஒருவன் என்று ஏற்று , அவனே எனது இரட்சகனும், உண்மையான கடவுளும், எனது படைப்பாளனும், எனது உண்மையான இறைவனுமாவான், அவனுக்கு நிகராக எவனும் இல்லை என்று நம்பிக்கை கொண்டேன் எனக் கூறுவீராக என்று வேண்டினார்கள். பின் அல்லாஹ் விதித்த கட்டாயக் கடமைகளை நிறைவேற்றுவதன் மூலமும் அல்லாஹ் தடுத்த விடயங்களை தவிர்ந்திருப்பதன் மூலமும் அவனுக்குக் கட்டுப்பட்டு அதிலே நிலைத்திருக்குமாறும் வேண்டினார்கள்.

فوائد الحديث

அல்லாஹ்வை அவனது ருபூபிய்யத், உலூஹிய்யத் மற்றும் அவனது திருநாமங்கள், பண்புகளைக் கொண்டு விசுவாசம் கொள்வது இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையாகும்.

ஈமானிற்குப் பிறகு அதில் உறுதியாக இருத்தல், வணக்கவழிபாடுகளை தொடராக செய்தல், அதில் உறுதியாக இருத்தலின் முக்கியத்துவம் இந்த ஹதீஸில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஈமான் -அல்லாஹ்வை விசுவாசம் கொள்வது- அமல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்குரிய ஒரு பிரதான நிபந்தனையாகும்.

ஈமான் -அல்லாஹ்வை விசுவாசம் கொள்வது- என்பது ஒருவர் ஈமான் கொள்ளவேண்டிய ஈமான் தொடர்பான கோட்பாடுகள் மற்றும் அதன் அடிப்படைகள் மேலும் அது தொடர்பான உளச் செயற்பாடுகள் ஆகியவற்றை உள்ளடக்குவதுடன் அல்லாஹ்வுக்கு மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் பணிந்து கட்டுப்பட்டு நடப்பதைக் குறிக்கும்.

உறுதியாக இருத்தல் என்பது கடமையான விடயங்களை செய்து, தடைசெய்தவற்றை முற்றாக விட்டுவிடுவதன் மூலம் மார்க்கத்தில் உறுதியாக இருத்தல்.

التصنيفات

வல்லமையும் கீர்த்தியும் மிக்க அல்லாஹ்வின் மீது விசுவாசம் கொள்ளல்., உளப்பரிசுத்தம் செய்தல்