நாய் மற்றும் உருவமிருக்கும் வீட்டில் மலக்குமார்கள் பிரவேசிக்க மாட்டார்கள்

நாய் மற்றும் உருவமிருக்கும் வீட்டில் மலக்குமார்கள் பிரவேசிக்க மாட்டார்கள்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக -அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : நாய் மற்றும் உருவமிருக்கும் வீட்டில் மலக்குமார்கள் பிரவேசிக்க மாட்டார்கள்.

[சரியானது] [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்]

الشرح

நாயோ உயிர் உள்ள உருவப்படமோ உள்ள வீட்டில் அருள் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அவர்கள குறிப்பிடுகிறார்கள். ஏனென்றால் உயிருள்ள உருவப்படங்களை உருவாக்குவது (சித்தரிப்பது) மிகப்பெரும் ஒரு தீமையாகும். காரணம் அவை அல்லாஹ்வின் படைப்பை ஒத்திருப்பதோடு இணைவைப்பிற்கு வழிவகுக்கும் ஒரு சாதனமாக இருக்கிறது அத்துடன் அவ்வுருவப்படங்களில் சிலவை அல்லாஹ்வைத் தவிர்த்து வணங்கப்படுபவைகளாகும். நாய் இருக்கும் வீட்டிட்குள் மலக்குகள் நுழையாது இருப்பதற்கு அவை அதிகம் அசுத்தமானவற்றை சாப்பிடுவதும். அதே வேளை சில நாய்கள் ஷைத்தான்கள் என அழைக்கப்டுவதும் காரணமாக அமைந்துள்ளது. அந்தவகையில் ஷைத்தான்கள் மலக்குகளுக்கு எதிரானோர் ஆவார்கள். மேலும் மலக்குகள் நாயிருக்கும் வீட்டிட்குள் நுழையாது இருப்பதற்கு அதன் துர்நாற்றமும் ஒரு காரணமாகும். ஏனெனில் துர்நாற்றத்தை மலக்குகள் விரும்புவதில்லை. இன்னொரு காரணம் நாயை செல்லப்பிராணியாக எடுத்துக் கொள்வது தடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அருள் மலக்குகள் அவரின் வீட்டிட்குள் நுழையாது இருப்பதன் மூலமும் அதில் தொழாது, அவருக்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்காது, அவருக்கும் அவரது வீட்டிட்கும் அருள்வளம் கிடைப்பதற்கு பிரார்த்திக்காதிருப்பதன் மூலமூம் அவரை ஷைத்தானின் தீங்கு ஏற்படுவதை விட்டும் தடுக்காதிருப்பதன் மூலமும் அதனை செல்லப் பிராணியாக எடுத்துக்கொண்டவர் தண்டிக்கப் படுகிறார்.

فوائد الحديث

வேட்டை நாய், மேய்ப்பு நாய் அல்லது விவசாய நிலங்களை பாதுகாப்பதற்காக வளர்கக்கப்படும் நாயைத் தவிர, வேறு எந்த நாயையும் வளர்ப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

உருவங்களை வைத்திருப்பது ஒரு தீய பழக்கமாகும், இது மலக்குகளை அந்த இடத்தை விட்டு வெளியேறச் செய்கிறது மேலும் அவற்றை வைத்திருப்பது இறை அருளை இழக்க ஒரு காரணமாக அமைந்துவிடும். இது நாயை வளர்ப்பதற்கும் பொருந்தும்.

நாய் அல்லது படங்கள் உள்ள வீடுகளுக்குள் நுழையாத மலககுகள் மலாஇகதுர்ரஹ்மா எனும் அருள் மலக்குகள் ஆவர். பாதுகாவல் மலக்குகள் மற்றும் அவர்கள் அல்லாதோர் அதாவது உயிரை கைப்பற்றுவதற்காக நியமிக்கப்பட்ட மலககுகள் போன்ற குறிப்பிட்ட பணிகள் ஒப்படைக்கப்பட்ட பிற மலக்குகள் ஒவ்வொரு வீட்டிற்கும் நுழைவார்கள்.

சுவர்களிலோ அல்லது பிற பொருட்களிலோ உயிருள்ள உருவங்களைக் கொண்ட படங்களைத் தொங்கவிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

இமாம் அல்-கத்தாபி கூறுகிறார்கள்: நாய்கள் மற்றும் படங்கள் அங்கு வைக்கப்படுவதற்குத் தடை செய்யப்பட்டிருந்தால் தவிர, நாய் அல்லது படம் இருக்கும் வீட்டிற்குள் மலக்குமார்கள்; நுழைய மாட்டார்கள். பண்ணை விலங்குகள் மற்றும் விவசாய நிலங்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப் படும் வேட்டை நாய்கள் மற்றும் நாய்கள் தடை செய்யப்படவில்லை. போர்வைகள், தலையணைகள் மற்றும் முக்கியமற்றதாகக் கருதப்படும் பிற பொருட்களின் மீது வரையப்பட்ட ஓவியங்களும் தடைசெய்யப்படவில்லை. எனவே, மலக்குமார்கள் நுழைவது தடைசெய்யப் படவில்லை.

التصنيفات

வணக்க வழிபாடுகளில் ஏகத்துவம்