'தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிய யூத கிறிஸ்தவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம்…

'தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிய யூத கிறிஸ்தவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக!'

ஆஇஷா மற்றும் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா இருவரும் கூறினார்கள் : 'நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மரண வேளை நெருங்கியபோது தங்களின் போர்வையைத் தம் முகத்தின் மீது போடுபவர்களாகவும் மூச்சுத் திணறும் போது அதைத் தம் முகத்தைவிட்டு அகற்றுபவர்களாகவும் இருந்தார்கள். இந்த நிலையில் அவர்கள் இருக்கும்போது 'தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிய யூத கிறிஸ்தவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக!' எனக் கூறி அவர்களின் செய்கை பற்றி எச்சரித்தார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

ஆஇஷா மற்றும் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹும் ஆகிய இருவரும் எமக்கு ஓரு செய்தியை தெரிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு மரணவேளை நெருங்கிய போது தனது முகத்தில் ஒரு துணித்துண்டை முகத்தில் போடுவதும், மூச்செடுப்பது சிரமமாகும் போது அதனை அகற்றுபவராகவும் இருந்தார்கள். அந்த நெருக்கடியான நேரத்தில் : யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக, அவனின் அருளை விட்டும் தூரப்படுத்துவானாக எனக் கூறினார்கள். ஏனெனில் அவர்கள் தமது நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள். இந்த விடயத்தின் பாரதூரத்தின் காரணமாக அவர்கள் இதனை இவ்வாறான நெருக்கடியான நேரத்தில் கண்டித்துள்ள்ளார்கள். யூத, கிறிஸ்தவர்கள் வீழ்ந்த அதே பாவத்தில் தமது சமூகமும் வீழ்ந்துவிடாமலிருக்கவே நபியவர்கள் இவ்வாறு எச்சரித்துள்ளார்கள், அது மாத்திரமின்றி இந்த செயலானது அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் மாபாதகச் செயலுக்கும் வழிவகுக்கும் ஒரு மிகப்பெரும் பாவமாகும்.

فوائد الحديث

நபிமார்கள், நல்லடியார்களின் சமாதிகளை அல்லாஹ்வைத் தொழும் மஸ்ஜித்களாக ஆக்குவது தடை செய்யப்பட்டதாகும். ஏனெனில் அது இணைவைப்பிற்கு இட்டுச் செல்லக் கூடியதாகும்.

ஓரிறைக் கொள்கை மீதான அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தீவிர ஆர்வமும், கரிசனையும் வெளிப்படுவதுடன் தனது மண்ணறையானது அளவு கடந்து மகிமைப்படுத்தப்படுவது பற்றிய அவர்களது அச்சமும் இங்கு வெளிப்படுகிறது. ஏனெனில் அதுவும் இணைவைப்பிற்கு இட்டுச் செல்லக் கூடியதாகும்.

மண்ணறைகளை கட்டுதல், அவற்றை பள்ளிகளாக ஆக்குதல் போன்ற காரியங்களில் ஈடுபடும் யூத, கிறிஸ்தவர்கள், அவர்களைப் போன்று செயற்படுபவர்களை சபிப்பது அனுமதிக்கப்பட்டதாகும்.

கப்ருகள் மீது சமாதிகள் கட்டுவது யூத, கிறிஸ்தவர்களின் வழிமுறையாகும். இந்த ஹதீஸ் அவர்களுக்கு ஒப்பாக நடப்பதை தடைசெய்கிறது.

குறித்த மண்ணறை கட்டப்படாவிட்டாலும் கப்ருக்கு பக்கத்தில் தொழுவது அல்லது அதனை நோக்கி தொழுகையில் ஈடுபடுவதும் மண்ணறைகளை பள்ளிவாயில்களாக எடுத்துக்கொள்வதில் உள்ளடங்குகின்றது.

التصنيفات

வணக்க வழிபாடுகளில் ஏகத்துவம்