“எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான்…

“எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றைவிட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதில்லை

அபூ ஹூரைரா ரழியல்லாஹுஅன்ஹு அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது : அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள் : “எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றைவிட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வழிபாடுகளால் என் பக்கம் நெருங்கி வந்துகொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறை நம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.”

[ஸஹீஹானது-சரியானது] [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்]

الشرح

ஹதீஸ் குத்ஸியில் அல்லாஹ் கூறியதாக நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவிக்கிறார்கள் : யார் எனது நேசர்களில் ஒருவரை நோவினை செய்து அவரை கோபப்படுத்தி வெறுப்புக்குள்ளாக்குகிறாரோ நான் அவனுடனான எனது வெறுப்பை பகைமையை வெளிப்படையாக தெரிவித்துக்கொள்கிறேன். வலி என்பது இறையச்சமுடைய முஃமினை –நம்பிக்கையாளனை- குறிக்கும். ஓர் அடியானிடம்; காணப்படும் ஈமான் மற்றும் இறையச்சத்தின் அளவிற்கேட்ப அல்லாஹ்வின் நேசத்தைப் ஒருவன் அடைந்து கொள்கிறான். ஒரு முஸ்லீம் தனது இறைவனிடம் அவன் கட்டளையிட்டதையும் கடமையாக்கியதையும் செய்வதன் மூலமும், அவனுக்கு மிகவும் பிடித்தமான காரியங்களைச் செய்வதன் மூலமும்; தடை செய்யப்பட்டதைத் தவிர்ப்பதன் மூலமும் நெருங்குகிறான். அதே போன்று அவர் அல்லாஹ்வின் அன்பைப் பெறும் வரை, அவர் கடமையான செயல்களுடன்; நப்லான செயல்கள் மூலம் அவனை நெருங்குகிறான். எனவே அல்லாஹ் இவ்வாறான ஒரு முஸ்லிமை நேசித்துவிட்டால் அவனுடைய நான்கு உறுப்புகளையும் சரியான முறையில் பயன்படுத்துவதற்கு அவனுக்கு வழிகாட்டுவான். அவரது செவித்திறனை அல்லாஹ் விரும்பியதை மாத்திரம் செவிமடுக்க வழிகாட்டுவான் . அவர் தனது பார்வையை, அல்லாஹ் எதைப் பார்ப்பதை விரும்பி அதன் மூலம் திருப்தி அடைவானோ அவற்றை பார்ப்பதற்கு உதவி செய்வான். அல்லாஹ்வை திருப்திப்படுத்தும் விடயங்களை மாத்திரம் தனது கையால் செய்வதற்கு அவனது கைக்கு அல்லாஹ் வழிகாட்டுவான். மேலும் அவனது காலுக்கு வழிகாட்டுவது என்பது அல்லாஹ்விரும்புகின்ற செயலுக்காக மாத்திரம் நடந்து செல்லுதல் மற்றும் நன்மையான காரியத்திற்கு விரைந்து செல்வதைக் குறிக்கும். இவற்றுடன் அந்த அடியான் அல்லாஹ்விடம் எதையாவது கேட்டுப் பிரார்த்தித்தால்; அவன் கேட்டவற்றை அவனுக்கு அல்லாஹ் வழங்குவான். இந்த வகையில் துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் அடியானாக அவன் இருப்பான். அதே போன்று ஏதாவது ஒரு தீங்கிலிருந்து தன்னை பாதுகாக்குமாறு கோரி பாதுகாப்புத் தேடினால் அவன் பயப்படுகின்ற தீங்குகளைவிட்டு அவனை அல்லாஹ் பாதுகாப்பான் பின் அல்லாஹ் கூறுகிறான்: ஓர் இறை நம்பிக்கையாளனிடத்தில் தனக்குள்ள கருணையின் காரணமாக அவனின்; உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. ஏனெனில் அவனோ அதில் சிரமம் இருப்பதினால் மரணத்தை வெறுக்கிறான். அல்லாஹ்வும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறான்.

فوائد الحديث

இந்த ஹதீஸ் அல்லாஹ் கூறியதாத நபி ஸல்லல்லாஹு அவர்கள் அறிவிக்கும் நபி மொழியாகும். இவ்வாறான ஹதீஸ்கள் 'ஹதீஸ் குத்ஸீ (புனிதமிக்க நபிமொழி), 'ஹதீஸ் இலாஹீ' (தெய்வீக நபிமொழி) எனும் பெயர்களால் அழைக்கப்படுகிறன. இவ்வாறான ஹதீஸ்களின் வார்த்தையும் கருத்தும் அல்லாஹ்விடமிருந்துமுள்ளதாகும். என்றாலும் அல்குர்னுக்குரிய தனித்துவங்கள் இதற்குக் கிடையாது. அதாவது அல்குர்ஆன் பெற்றுள்ள தனித்துவங்களான ஓதுவது வணக்கம், ஓதுவதற்கு வுழு செய்து கொள்ளுதல் (விரும்பத்தக்கது),சவால் விடுதல், அற்புதம் போன்றவை இவ்வகையான ஹதீஸ்களுக்கு கிடையாது.

அல்லாஹ்வின் நேசர்களை நோவினைப்படுத்துவது அல்லது தீங்கு விளைவிப்பது தடுக்கப்பட்டிருப்பதோடு, அவர்களை நேசித்து அவர்களின் சிறப்பையும் தகுதியையும் ஏற்றுக்கொள்ள ஆர்வமூட்டப்பட்டிருத்தல்.

அல்லாஹ்வின் எதிரிகளுடன் பகைமை காட்டுமாறு கட்டளையிடப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வது ஹராமாக்கப்பட்டிருத்தல்.

அல்லாஹ்வின் சட்டதிட்டங்களை பின்பற்றாது அவனின் நேசத்தை வாதிடுபவன் அவனின் வாதாட்டத்தில் பொய்யனாக உள்ளான்.

கடமையாக்கப்பட்டவற்றை நிறைவேற்றி, தடைசெய்யப்பட்டவற்றை விட்டுவிடுவதன் மூலம் அல்லாஹ்வின் நேசத்தை அடைந்து கொள்ளலாம்.

அல்லாஹ் ஒரு அடியானை விரும்பி அவனின் பிரார்த்தனை ஏற்றுக்ககொள்வதற்கான வழிகளில் ஒன்று கடமையான விடயங்களை நிறைவேற்றி, தடுக்கப்பட்ட விடயங்களை தவிர்ந்து நடப்பதோடு நப்லான -உபரியான- வணக்கங்களை செய்வதாகும்.

இறைநேசர்களின் சிறப்பும் அவர்களின் உயர் மகிமையும் எடுத்துரைக்கப்பட்டிருத்தல்.

التصنيفات

இறைதிருநாமங்கள் மற்றும் பண்புகளில் ஏகத்துவம்