அல்லாஹ்வுக்கு நிகராக வேறொருவரை அழைக்கும் நிலையில் மரணித்தவர் நரகில் நுழைவார்.

அல்லாஹ்வுக்கு நிகராக வேறொருவரை அழைக்கும் நிலையில் மரணித்தவர் நரகில் நுழைவார்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வுக்கு நிகராக வேறொருவரை அழைக்கும் நிலையில் மரணித்தவர் நரகில் நுழைவார்".

[ஸஹீஹானது-சரியானது] [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்]

الشرح

அல்லாஹ்வுக்கு மாத்திரம் சொந்தமான வணக்கங்களில் ஒன்றை வேறொருவருக்கு வழங்கி, அதிலேயே தொடர்ந்திருந்து, மரணித்தால் அவரின் தங்குமிடம் நரகமே என நபியவர்கள் இந்நபிமொழியில் எமக்கு அறிவிக்கின்றார்கள்.

فوائد الحديث

இணைவைப்பில் மரணிப்பவர் நரகில் நுழைவார், அது பெரிய இணைவைப்பாக இருந்தால் நிரந்தரமாக இருப்பார். சிறியதாக இருந்தால் அல்லாஹ் நாடிய காலம் வரை தண்டிக்கப்பட்டு, பின் அதிலிருந்து வெளியேறி விடுவார்.

நற்செயல்களில் இறுதியை வைத்தே முடிவு கணிக்கப்படுகின்றது.

பிரார்த்தனை ஒரு வணக்கமாகும், அது அல்லாஹ்வன்றி வேறு யாருக்கும் செலுத்தப்படலாகாது.

التصنيفات

வணக்க வழிபாடுகளில் ஏகத்துவம்