அல்லாஹ் விரும்பும் இரண்டு பண்புகள் உங்களிடம் இருக்கின்றன.அவை விவேகமும்,நிதானமுமாகும்

அல்லாஹ் விரும்பும் இரண்டு பண்புகள் உங்களிடம் இருக்கின்றன.அவை விவேகமும்,நிதானமுமாகும்

அல்லாஹ் விரும்பும் இரண்டு பண்புகள் உங்களிடம் இருக்கின்றன.அவை விவேகமும்,நிதானமுமாகும்.என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துலாலஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கி.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

பனூ அப்த் கைஸ் கோத்திரத்தைச் சேர்ந்த அல் அஷஜ் என்பாரிடம் ரஸூல் (ஸல்) அவர்கள் உங்களிடம் அல்லாஹ் விரும்பும் இரண்டு பண்புகள் இருக்கின்றன.அவை அறிவு நுற்பமும்,பொருமையும் எனகூறினார்கள்.காரணம் யாதெனில் அஷஜின் சமூகத்தார் தங்களின் நலன்களை அடைந்து கொள்வதற்காக அவசரப்பட்டு நபிகளாரிடம் வந்தது போலல்லாது அவர் தன்னுடைய நலனை அடையும் வரையில் பொருமையுடன் எதிர்பார்த்திருந்தார்கள்.மேலும் அவர் ரஸூல் (ஸல்) அவர்களுடன் உரையாடும் போது அவர் பேசிய வார்த்தைகள் அவரின் அறிவு நுற்பத்தையும்,அவசரமில்லாமல் அவர் நல்ல முடிவுகளை எதிர்பார்த்து நின்ற து அவரின் திறமையையும் எடுத்துக் காட்டியது

التصنيفات

இறைதிருநாமங்கள் மற்றும் பண்புகளில் ஏகத்துவம், நற்குணங்கள்