இரக்கமுள்ளவர்களுக்கு ரஹ்மானாகிய அல்லாஹ் இரக்கம் காட்டுவான், பூமியிலுள்ளவர்களுக்கு இரக்கம் காட்டுங்கள்,…

இரக்கமுள்ளவர்களுக்கு ரஹ்மானாகிய அல்லாஹ் இரக்கம் காட்டுவான், பூமியிலுள்ளவர்களுக்கு இரக்கம் காட்டுங்கள், வானிலுள்ளவன் உங்களுக்கு இரக்கம் காட்டுவான்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்கள் கூறினார்கள் : "இரக்கமுள்ளவர்களுக்கு ரஹ்மானான அல்லாஹ் இரக்கம் காட்டுவான், பூமியிலுள்ளவர்களுக்கு இரக்கம் காட்டுங்கள், வானிலுள்ளவன் உங்களுக்கு இரக்கம் காட்டுவான்".

[ஸஹீஹானது-சரியானது] [இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்]

الشرح

இரக்கமுள்ளவர்கள் என்போர் பூமியிலுள்ள மனிதன், பிராணிகளை அன்பு, உபகாரம், உதவி மூலம் மதித்து, இரக்கம் காட்டுவோராகும். ரஹ்மான் எனும் பெயர் ரஹ்மத் எனும் இரக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட பெயராகும். அவர்களுக்கு உபகாரம் செய்து, பேரருள் புரிவதே அவனுடைய இரக்கமாகும். செயலுக்கேற்ப கூலி கிடைக்கும். பூமியிலுள்ளோருக்கு இரக்கம் காட்டுங்கள் என பொதுவாக இடம்பெற்றிருப்பது அனைத்துப் படைப்பினங்களையும் உள்ளடக்கவே. எனவே நல்லவன், தீயவன், ஐவாய்ப் பிராணிகள், பறவைகள் அனைத்திற்கும் இரக்கம் காட்ட வேண்டும். வானிலுள்ளவன் உங்களுக்கு இரக்கம் காட்டுவான் என்றால் வானிலுள்ள அல்லாஹ் உங்களுக்கு இரக்கம் காட்டுவான் என்பதாகும். இது வானிலுள்ள மலக்குகளையே குறிக்கின்றது போன்ற மாற்றுக் கருத்துக்கள் கொடுப்பது கூடாது. ஏனெனில் அல்லாஹ் படைப்பினங்களை விட உயரத்தில் உள்ளான் என்பது அல்குர்ஆன், ஸுன்னா, அறிஞர்களின் ஒருமித்த கருத்து மூலம் உறுதியான விடயமாகும். அல்லாஹ் வானில் உள்ளான் என்பதன் அர்த்தம் வானம் அவனை சூழ்ந்துள்ளது, அவன் வானத்திற்குள் உள்ளான் என்பதல்ல. அல்லாஹ் அத்தகைய கருத்துக்களை விட்டும் உயர்ந்தவன். இங்கு நபி மொழியில் அதனைக் குறிக்க இடம்பெற்றுள்ள في என்பதற்கு على என்பதன் அர்த்தமே வழங்கப்படுகின்றது. அதாவது வானிற்கு மேலே அனைத்துப் படைப்பினங்களுக்கும் மேலே உயர்ந்து விட்டான் என்பதே இதன் அர்த்தமாகும்.

فوائد الحديث

இரக்கம் அல்குர்ஆன், ஸுன்னாவைப் பின்பற்றுவதுடன் பிணைக்கப்பட்டுள்ளது. தண்டனைகளை நிறைவேற்றுவது, அல்லாஹ்வின் கண்ணியத்திற்காகப் பழிதீர்த்தல் போன்றன இந்த இரக்கத்துடன் முரண்பட மாட்டாது.

அல்லாஹ் அனைத்துப் படைப்பினங்களை விட வானிற்கு மேலே உயர்ந்து விட்டான்.

அல்லாஹ்வுக்கு இரக்கம் எனும் பண்பு உண்டு என்பதை உறுதிப்படுத்தல்.

التصنيفات

இறைதிருநாமங்கள் மற்றும் பண்புகளில் ஏகத்துவம், இறைதிருநாமங்கள் மற்றும் பண்புகளில் ஏகத்துவம், நற்குணங்கள், நற்குணங்கள்