'ஆதமின் மகனே, நீ என்னிடம் பிரார்த்தித்து, என்மீது எதிர்பார்ப்பு வைத்திருக்கும் காலமெல்லாம் நீ செய்தவற்றை…

'ஆதமின் மகனே, நீ என்னிடம் பிரார்த்தித்து, என்மீது எதிர்பார்ப்பு வைத்திருக்கும் காலமெல்லாம் நீ செய்தவற்றை பொருட்படுத்தாது அதுவரை நீ எந்த நிலையில் இருப்பினும் நான் உன்னை மன்னித்துக் கொண்டிருப்பேன்

அல்லாஹ்வின் தூதர் கூறுவதை தான் கேட்டதாக அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் : எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகிறான்; : 'ஆதமின் மகனே, நீ என்னிடம் பிரார்த்தித்து, என்மீது எதிர்பார்ப்பு வைத்திருக்கும் காலமெல்லாம் நீ செய்தவற்றை பொருட்படுத்தாது அதுவரை நீ எந்த நிலையில் இருப்பினும் நான் உன்னை மன்னித்துக் கொண்டிருப்பேன். ஆதமின் மகனே, உன்னுடைய பாவங்கள் வானத்தை எட்டும் அளவிற்கு உயர்ந்து விட்டாலும் பின், நீ என்னிடம் மீண்டு மன்னிப்புக் கோருவாயானால், நீ செய்தவற்றை பொருட்படுத்தாது நான் உன்னை மன்னிக்கவே செய்வேன். ஆதமின் மகனே, நீ பூமியை நிறைத்திடும் அளவிற்கு பாவங்கள் செய்து விட்ட பிறகும் கூட, எனக்கு இணை வைக்காத நிலையில் என்னை சந்தித்தால் அதே அளவுக்கு பாவமன்னிப்பை உனக்கு வழங்குவேன் .

[ஹஸனானது-சிறந்தது] [இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஹதீஸ்குத்ஸியில் அல்லாஹ் கூறியதாக அறிவிக்கிறார்கள்; ஆதமின் மகனே : நம்பிக்கை இழக்காது நீ என்னிடம் பிரார்த்தித்து எனது கருணையை எதிர்பார்த்திருக்கும் காலமெல்லாம் உனது பாவத்தை எவ்விதப்பொருட்படுத்தலுமின்றி மன்னிப்பேன் அந்தப் பாவம் அல்லது குற்றம் பெரும்பாவங்களில் ஒனறாக இருப்பினும் சரியே. ஆதமின் மகனே! உனது பாவம் வானம் பூமி நிறையும் அளவுக்கு அதிகமாக காணப்பட்டு அதற்காக என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அதன் அதிகத்தை பொருட்படுத்தாது உமது எல்லா பாவத்தையும் மன்னிப்பேன். ஆதமின் மகனே! நீ எதையும் இணைவைக்காத நிலையில் ஏகத்துவவாதியாக வாழ்ந்து, மரணித்த பின் இந்தப் பூமி நிறைய பாவங்களுடன் தவறுகளுடனும் வந்தாலும் உமது பாவங்களுக்கும் தவறுகளுக்கும் நிகராக இப்பூமி நிறைய மன்னிப்பை வழங்குவேன். ஏனெனில் நான் மன்னிப்பு வழங்குவதில் தயாளன். நான் இணைவைப்பைத் தவிர அனைத்து பாவங்களையும் மன்னிக்கிறேன்.

فوائد الحديث

அல்லாஹ்வின் கருணை, மன்னிப்பு மற்றும் அருளின் விசாலம் குறிப்பிடப்பட்டுள்ளமை.

அல்லாஹ் ஏகத்துவத்துவாதிகளின் பாவங்களையும் தவறுகளையும் மன்னக்கிறான் என்ற வகையில் தவ்ஹீதின் சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளமை.

இணைவைப்பாளர்களை அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்பதினால் இணைவைப்பின் அபாயம் குறிப்பிடப்பட்டடுள்ளமை.

இறை மன்னிப்பை பெற்றுக்கொள்வதற்கான மூன்று வழிகளை இந்த ஹதீஸ் உள்ளடக்கியுள்ளதாக இமாம் இப்னு ரஜப் அவர்கள் கூறுகிறார்கள்: முதலாவது : எதிர்பார்ப்புடன் கூடிய பிரார்த்தனை இரண்டாவது: இஸ்திஃபாரும் தவ்பாவும் மூன்றாவது : தவ்ஹிதில் (அல்லாஹ்வுக்கு இணைவைக்காத நிலையில்) மரணித்தல்.

இந்த ஹதீஸ் அல்லாஹ் கூறியதாத நபி ஸல்லல்லாஹு அவர்கள் அறிவிக்கும் நபி மொழியாகும். இவ்வாறான ஹதீஸ்கள் 'ஹதீஸ் குத்ஸீ (புனிதமிக்க நபிமொழி), 'ஹதீஸ் இலாஹீ' (தெய்வீக நபிமொழி) எனும் பெயர்களால் அழைக்கப்படுகிறன. இவ்வாறான ஹதீஸ்களின் வார்த்தையும் கருத்தும் அல்லாஹ்விடமிருந்துமுள்ளதாகும். என்றாலும் அல்குர்னுக்குரிய தனித்துவங்கள் இதற்குக் கிடையாது. அதாவது அல்குர்ஆன் பெற்றுள்ள தனித்துவங்களான ஓதுவது வணக்கம், ஓதுவதற்கு வுழு செய்து கொள்ளுதல் (விரும்பத்தக்கது),சவால் விடுதல், அற்புதம் போன்றவை இவ்வகையான ஹதீஸ்களுக்கு கிடையாது.

பாவங்கள் மூன்று வகைப்படும் : முதலாவது : அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் இதனை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்க மாட்டான். இது குறித்து அல்லாஹ் '; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ அவனுக்கு சுவர்க்கத்தை ஹராமாக்கியுள்ளான் ' என்று கூறுகிறான். இரண்டாவது : ஒரு அடியான் பாவங்கள் மற்றும் தவறுகள் செய்தவதினால் தனக்கு அநியாயம் செய்து கொள்வது. இதனை அல்லாஹ் நாடினால் மன்னிப்பான் மூன்றாவது : அல்லாஹ் எந்த வகையிலும் விட்டுவிடாத பாவங்கள் அதுதான் அடியார்கள் தங்களுக்கு மத்தியில் ஒருவருக்கொருவர் அநியாயம் செய்தல்.இதற்கு பழிக்கு பழி தீர்த்தல் என்ற தண்டனையைத் தவிர வேறில்லை.

التصنيفات

இறைதிருநாமங்கள் மற்றும் பண்புகளில் ஏகத்துவம், பாவமீட்சி