மக்களில் உமது பரிந்துரைக்கு மிகத் தகுதியானவர் யார்? "உளத்தூய்மையுடன் லாஇலாஹ இல்லல்லாஹ் எனக் கூறியவர்"…

மக்களில் உமது பரிந்துரைக்கு மிகத் தகுதியானவர் யார்? "உளத்தூய்மையுடன் லாஇலாஹ இல்லல்லாஹ் எனக் கூறியவர்" என்றார்கள்.

அபூ ஹுரைரா (ரலி) கூறுகின்றார் : மக்களில் உமது பரிந்துரைக்கு மிகத் தகுதியானவர் யார்? என நான் நபி (ஸல்) அவர்களிடம் வினவிய போது "உளத்தூய்மையுடன் லாஇலாஹ இல்லல்லாஹ் எனக் கூறியவர்" எனக் கூறினார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்]

الشرح

மக்களில் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரைக்கு மிக அருகதையானவர், தகுதியுள்ளவர் யார் என அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் இணைவைப்போ, முகஸ்துதியோ கலக்காத உளத்தூய்மையுடன் "லாஇலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்" (உண்மையாக வணங்கப்படத் தகுதியான ஒரே இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்" எனும் சாட்சியத்தைக் கூறியவர்கள் என பதிலளித்தார்கள்.

فوائد الحديث

மறுமையில் பரிந்துரை உண்டு என்பதை உறுதிப்படுத்தல். எதிலும் உளத்தூய்மை அவசியமானதாகும். முகஸ்துதி இகழப்பட்ட ஒன்றாகும். அது மறுமையில் பரிந்துரை கிடைக்காமலிருக்கக் காரணமாகும். அபூ ஹுரைரா (ரலி) அவர்களின் சிறப்பு இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

التصنيفات

வணக்க வழிபாடுகளில் ஏகத்துவம், வணக்க வழிபாடுகளில் ஏகத்துவம்