பெரும்பாவங்கள் : அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், அவனது உபாயத்திலிருந்து அச்சமற்றிருத்தல், அவனது அருளிலிந்து…

பெரும்பாவங்கள் : அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், அவனது உபாயத்திலிருந்து அச்சமற்றிருத்தல், அவனது அருளிலிந்து நிராசையடைதல், அவனது ரஹ்மத்திலிருந்து நம்பிக்கையிழத்தல் என்பனவாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அறிவிக்கிறார்கள் : "பெரும்பாவங்கள் : அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், அவனது உபாயத்திலிருந்து அச்சமற்றிருத்தல், அவனது அருளிலிந்து நிராசையடைதல், அவனது ரஹ்மத்திலிருந்து நம்பிக்கையிழத்தல் என்பனவாகும்".

[இதன் இஸ்னாது- அறிவிப்பாளர் தொடர் ஸஹீஹானது-சரியானது] [இதனை அப்துர்ரஸ்ஸாக் பதிவு செய்துள்ளார்]

الشرح

பெரும்பாவங்களாகக் கணிக்கப்படும் சில பாவங்களை நபியவர்கள் இங்கு கூறியுள்ளார்கள். அவை 1. அல்லாஹ்வின் பரிபாளனக் கோட்பாடு, இறைமையில் அவனுக்கு நிகராக இன்னொருவரை வைத்தல், இதுதான் மிகப்பெரிய பாவமென்பதால் இதனைக் கொண்டே ஆரம்பித்துள்ளார்கள். 2. அல்லாஹ்வின் மீதான ஆதரவைத் துண்டித்தல், ஏனெனில் இது அல்லாஹ்வைப் பற்றி தவறான எண்ணம் வைத்தல் மற்றும் அவனது அருளின் விசாலத்தை அறியாதிருத்தலின் வெளிப்பாடாகும். 3. அடியானுக்கு அருள்களைக் கொடுத்து, துஷ்பிரயோகம் செய்ய விட்டுவிட்டுஅலட்சியமாக இருக்கும் போது அவனை அல்லாஹ் விட்டுப் பிடிப்பான் என்பதையிட்டு அச்சமற்றிருத்தல். மேற்கண்டவை மாத்திரம்தான் பெரும்பாவங்களென வரையறுத்தல் இந்நபிமொழியின் நோக்கமல்ல. ஏனெனில் பெரும்பாவங்கள் அதிகமாக உள்ளன, அவற்றில் மிக முக்கியமானதை விளக்குவதே இங்கு நோக்கமாகும்.

فوائد الحديث

பாவங்கள் சிறு பாவங்கள், பெரும் பாவங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இணைவைப்பு தான் பாவங்களில் கோரமானதும், மிகப் பெரியதுமாகும்.

அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து அச்சமற்றிருப்பதும், அவனது அருளில் நிராசையடைந்திருப்பதும் ஹராமாகும், அவை பெரும்பாவங்களில் உள்ளவையாகும்.

தந்திரோபாயம் செய்வோருக்குப் பதிலாக அல்லாஹ்வும் உபாயம் செய்யக்கூடியவன் எனக் கூறுவதில் அவனுக்கு இழுக்கு ஏதுமில்லை. இதுவும் பரிபூரண பண்புதான். உபாயம் செய்யத் தகுதியற்றவர்களுக்கு உபாயம் செய்வதுதான் கண்டிக்கத்தக்க பாவமாகும்.

அச்சம், ஆதரவு இரண்டிற்கும் மத்தியில் சமநிலை பேணுவது அவசியமாகும், அல்லாஹ்வை அஞ்சும்போது அவனது அருளில் நிராசையடைந்து விடக் கூடாது, அவனிடம் ஆதரவு வைக்கும் போது தண்டனையிலிருந்து அச்சமுற்றிருக்கக் கூடாது.

அல்லாஹ்வின் கண்ணியத்திற்கேற்றவாறு நேசம் எனும் பண்பு அவனுக்குண்டு.

அல்லாஹ்வைப் பற்றி நல்லெண்ணம் வைப்பது அவசியமாகும்.

التصنيفات

வணக்க வழிபாடுகளில் ஏகத்துவம்