'இம்மையில் அவனை இரண்டு கால்களால் நடக்கச் செய்த (இறை)வனுக்கு, மறுமைநாளில் அவனை அவனுடைய முகத்தால் நடக்கச்…

'இம்மையில் அவனை இரண்டு கால்களால் நடக்கச் செய்த (இறை)வனுக்கு, மறுமைநாளில் அவனை அவனுடைய முகத்தால் நடக்கச் செய்திட முடியாதா?'

கதாதா ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்: எமக்கு அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் . ஒருவர் 'இறைத்தூதர் அவர்களே! (திருக்குர்ஆன் 25:43 வது இறைவசனத்தின்படி மறுமை நாளில்) இறைமறுப்பாளன் தன்னுடைய முகத்தால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படுவது எப்படி?' என்று கேட்டார். நபியவர்கள் 'இம்மையில் அவனை இரண்டு கால்களால் நடக்கச் செய்த (இறை)வனுக்கு, மறுமைநாளில் அவனை அவனுடைய முகத்தால் நடக்கச் செய்திட முடியாதா?' என்று (திருப்பிக்) கேட்டார்கள்.(இதை அறிவித்த) கத்தாதா இப்னு திஆமா(ரஹ்) அவர்கள் 'ஆம். (முடியும்). எங்கள் இறைவனின் வலிமையின் மீதாணையாக!'' என்றார்கள்

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

மறுமை நாளில் காபிரான ஒருவர் முகம்குப்புர நிலையில் எழுப்பப்படுவது எப்படி? என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவப் பட்டது அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ''இம்மையில் அவனை இரண்டு கால்களால் நடக்கச் செய்த (இறை)வனுக்கு, மறுமைநாளில் அவனை அவனுடைய முகத்தால் நடக்கச் செய்திட முடியாதா? அவன் எல்லா விடயங்களிலும் வல்லமைமிக்கோனாக உள்ளான்.

فوائد الحديث

மறுமையில் இறைமறுப்பாளனுக்கு ஏற்படும் இழிவு. அவன் முகம் குப்புர நடப்பான்

التصنيفات

இறுதி நாள் மீது விசுவாசம் கொள்ளுதல், பரிபாலித்தல் விடயத்தில் ஏகத்துவம், இறைதிருநாமங்கள் மற்றும் பண்புகளில் ஏகத்துவம்