'உங்களின் மூதாதையரைக் கொண்டு நீங்கள் சத்தியம் செய்வதை அல்லாஹ் உங்களுக்குத் தடை விதிக்கிறான்' என்றார்கள்

'உங்களின் மூதாதையரைக் கொண்டு நீங்கள் சத்தியம் செய்வதை அல்லாஹ் உங்களுக்குத் தடை விதிக்கிறான்' என்றார்கள்

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், கூறியதாக உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். 'உங்களின் மூதாதையரைக் கொண்டு நீங்கள் சத்தியம் செய்வதை அல்லாஹ் உங்களுக்குத் தடை விதிக்கிறான்' என்றார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறக் கேட்டது முதல் நானாகப் பேசும் போதும் சரி; பிறரின் பேச்சை எடுத்துரைக்கும்போதும் சரி; நான் தந்தை பெயரால் சத்தியம் செய்ததில்லை என உமர் ரழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள் .

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

இந்த ஹதீஸில் அல்லாஹ் மூதாதையர்களின் மீது சத்தியம் செய்வதை தடுத்ததாக நபி ஸல்லலல்லாஹுஅலைஹிவஸல்லம் தெரிவிக்கிறார்கள். யார் சத்தியம் செய்ய விரும்புகிறாரோ அவர் அல்லாஹ்வைத்தவிர வேறு எதிலும் சத்தியம் செய்ய வேண்டாம். இந்த செய்தியை உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் கேட்டது முதல் அவர் விரும்பியோ அல்லது பிறரின் செய்தியை உறுதிப்படுத்துவதற்காகவோ அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்வதை தடுத்துக்கொண்டதாக குறிப்பிடுகிறார்கள்.

فوائد الحديث

அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்வது ஹராமாகும். இங்கு மூதாதையர்கள் மீது சத்தியம் செய்வது என குறிப்பிட்டு கூறக்காரணம் இது ஒரு ஜாஹிலிய்யாக் கால நடைமுறை என்பதினாலாகும்.

சத்தியம் செய்தல் என்பது ஏதாவது விடயத்தை உறுதிப்படுத்துவதற்காக அல்லாஹ்வின் மீதோ அல்லது அல்லாஹ்வின் பெயர்களின் மீதோ அல்லது அல்லாஹ்வின் பண்புள் மீதோ சத்தியம் செய்வதைக் குறிக்கும்.

இறைக்கட்டளைக்கு உடன் கட்டுப்படுதல், சிறந்த முறையில் புரிந்து கொள்ளுதல், பேணுதலைக் கடைப்பிடித்தல் போன்ற விடயங்களில் உமர் ரழியல்லாஹு அவர்களின் தனித்துவத்தையும் சிறப்பையும் இந்த ஹதீஸ் சுட்டிக்காட்டுகிறது.

التصنيفات

வணக்க வழிபாடுகளில் ஏகத்துவம்