அதற்கு நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'உண்மையிலேயே நீங்கள் அத்தகைய உணர்வுகளுக்கு உள்ளாகின்றீர்களா?'…

அதற்கு நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'உண்மையிலேயே நீங்கள் அத்தகைய உணர்வுகளுக்கு உள்ளாகின்றீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு நபித் தோழர்கள், 'ஆம்' என்று பதிலளித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'அதுதான் ஒளிவுமறைவற்ற (தெளிவான) இறைநம்பிக்கை' என்று கூறினார்கள்

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய தோழர்களில் சிலர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து, 'எங்கள் உள்ளத்தில் சில (குழப்பமான) விஷயங்கள் எழுகின்றன. அவற்றை (வெளிப்படுத்திப்) பேசுவதைக்கூட நாங்கள் மிகப்பெரும் (பாவ) காரியமாகக் கருதுகிறோம் (இது பற்றி தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?)' என்று கேட்டனர். அதற்கு நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'உண்மையிலேயே நீங்கள் அத்தகைய உணர்வுகளுக்கு உள்ளாகின்றீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு நபித் தோழர்கள், 'ஆம்' என்று பதிலளித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'அதுதான் ஒளிவுமறைவற்ற (தெளிவான) இறைநம்பிக்கை' என்று கூறினார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய தோழர்களில் சிலர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து, 'தங்களது உள்ளத்தில் எழுகின்ற, அருவருக்கத்தக்கதும்,பிறர் வெறுத்து புறக்கணிக்கத்தக்கதும், அவற்றைப் பேசுவது என்பதே மிகப்பெரிய பாவம் என்ற நிலையில் இருக்கும் விடயங்கள் சம்பந்தமாக விசாரித்தார்கள். அதற்கு நபியவர்கள் நீங்கள் உங்கள் உள்ளத்தில் காணும் இவ்வாறான எண்ணங்கள் ஈமானின் அப்பளுக்கற்ற தன்மைக்கு ஆதாரமாகவும். ஷைத்தான் உங்கள் உள்ளத்தில் எற்படுத்துகின்றவற்றை தடுக்கவும், அவற்றை பேசுவதை நீங்கள் வெறுக்கவும், அவற்றை மிகப்பெரியதொரு விடயமாக கருதவும் உங்களைத் தூண்டுகின்ற ஆழமான ஈமானிய உறுதியின் வெளிப்பாடாகவும் இது அமைந்துள்ளதுடன் ஷைத்தான் உங்களுடைய உள்ளங்களை ஆட்கொள்ளவில்லை என்பதை காட்டுகிறது. மாறாக ஷைத்தான் ஆட்கொண்ட உள்ளத்தைப் பொருத்தவரை இந்நிலை காணப்படமாட்டாது எனவும் விளக்கமளித்தார்கள்.

فوائد الحديث

முஃமின்களுக்கு ஷைத்தானால் மனஊசலாட்டத்தை தவிர வேறு எதையும் செய்ய முடியாது என்ற ஷைத்தானின் பலவீனத்தை தெளிவுபடுத்துதல்.

உள்ளத்தில் ஊசாலாடும் தேவையற்ற எண்ணங்களை ஏற்றுக்கொள்ளுதல், உண்மைப்படுத்துதல் கூடாது. ஏனெனில் அவை ஷைத்தானிடமிருந்து வந்தவையாகும்.

ஷைத்தானின் ஊசலாட்டம் முஃமினை பாதிக்கமாட்டாது. அவ்வாறான ஊசலாட்டம் தோன்றும்போது அதிலிருந்து பாதுகாப்புத்தேடுவதோடு அந்த உசாலாட்டத்தில் தொடர்ந்தும் இருப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

மார்க்க விவகாரங்களில் ஏற்படுகின்ற சிக்கள் குறித்து மௌனமாக இருக்காது அது குறித்து விசாரித்து அறிந்து கொள்வது ஒரு முஸ்லிமின் மீதுள்ள பொறுப்பும் கடமையுமாகும்.

التصنيفات

வல்லமையும் கீர்த்தியும் மிக்க அல்லாஹ்வின் மீது விசுவாசம் கொள்ளல்., நம்பிக்கை அதிகரித்தலும் குறைதலும்