(மறுமையில்) உங்களில் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் உரையாடுவான். அப்போது அவனுக்கும் உங்களுக்குமிடையே…

(மறுமையில்) உங்களில் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் உரையாடுவான். அப்போது அவனுக்கும் உங்களுக்குமிடையே மொழிபெயர்ப்பாளர் எவரும் இருக்கமாட்டார்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அதிய் இப்னு ஹாதிம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: (மறுமையில்) உங்களில் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் உரையாடுவான். அப்போது அவனுக்கும் உங்களுக்குமிடையே மொழிபெயர்ப்பாளர் எவரும் இருக்கமாட்டார்." நீங்கள் உங்கள் வலப் பக்கம் பார்ப்பீர்கள். அங்கு நீங்கள் முன்பே செய்து அனுப்பிய செயல்களையே காண்பீர்கள். உங்கள் இடப் பக்கம் பார்ப்பீர்கள். அங்கும் நீங்கள் முன்பே செய்து அனுப்பிய செயல்களையே காண்பீர்கள். உங்கள் முன்னால் பார்ப்பீர்கள். உங்கள் முகத்துக்கு எதிரே நரகத்தையே காண்பீர்கள். ஆகவே, ஒரு பேரீச்சம் பழத்துண்டை (தர்மமாக)க் கொடுத்தாவது நரகத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

ஒவ்வொரு விசுவாசியும் மறுமை நாளில் அல்லாஹ்வின் முன் தனித்து நிற்பார்கள் என்றும், அல்லாஹ்வும் அவனுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் ஒரு பரிந்துரையாளரோ அல்லது மொழிபெயர்ப்பாளரோ இல்லாமல் அவனிடம் பேசுவான் என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எமக்குத் தெரிவிக்கிறார்கள். அதனால் அவன் மிகுந்த பயத்துடன் தன் வலது பக்கத்தையும் இடது பக்கத்தையும் பார்ப்பான்; தனக்கு முன்பாக இருக்கும் நரகத்திலிருந்து தப்பிக்க ஏதாவது வழியைக் கண்டுபிடிக்க முடியுமா என்று அவன் ஆவலுடன் பார்ப்பான். அவன் தனது வலது பக்கம் பார்த்தால், தான்; செய்த நல்ல செயல்களைத் தவிர வேறு எதையும் காண மாட்டார். அவன் தனது இடது பக்கம் பார்த்தால், தான் செய்த கெட்ட செயல்களைத் தவிர வேறு எதையும் பார்க்க மாட்டார். அவன் தனக்கு முன்னால் பார்த்தால், நரகத்தைத் தவிர வேறு எதையும் அவன் காணமாட்டான், அதிலிருந்து அவன் விலகிச் செல்ல முடியாது ஏனென்றால் நரகத்திற்கு மேலே கட்டப்பட்ட ஸிராத் பாலத்தைக் கடப்பதைத் தவிர அவனுக்கு முன்னால் வேறு வழி இல்லை. பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'உங்களுக்கும் நரகத்திற்கும் இடையில் நன்மை மற்றும் தர்மத்தின் ஒரு தடுப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அது அரை பேரீச்சம் பழம் போன்ற சிறிய ஒரு பொருளாக இருந்தாலும் சரியே!' என்று கூறினார்கள்.

فوائد الحديث

தர்மம் செய்யும் பொருள் சிறியதாயின் அதனை தர்மம் செய்யுமாறும்;, பாரட்டத்தக்க நற்பண்புகளை கடைப்பித்து ஒழுகுமாறும், இரக்கத்துடனும், மென்மை மற்றும் கனிவான வார்த்தைகள் மூலம்; மக்களுடன் உறவாடுமாறும் ஆர்வமூட்டப் பட்டிருத்தல்.

மறுமை நாளில் அல்லாஹ் தன் அடியானுக் நெருக்கமாக இருப்பான். அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடையில் எந்தத் தடையும் இருக்காது, எந்தப் பரிந்துரையாளரும், எந்த மொழிபெயர்ப்பாளரும் இருக்க மாட்டார்கள். எனவே ஒவ்வொரு மனிதனும் தன் இறைவனின் கட்டளைகளை மீறுவதைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கட்டும்.

தானதர்மங்கள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அதை ஒருவர் அற்பமாக கருதக்கூடாது. எவ்வளவு சிறியதாக இருந்தாலும், தர்மாமனது நரகத்திலிருந்து பாதுகாக்கும் கேடயமாகும்.

التصنيفات

இறைதிருநாமங்கள் மற்றும் பண்புகளில் ஏகத்துவம், உபரியான தர்மம்