'அந்த உண்மையான வார்த்தைகளை ஜின் (வானவரிடமிருந்து) ஒத்துக்கேட்டு வந்து தம் (சோதிட) நண்பனின் காதில் சேவல்…

'அந்த உண்மையான வார்த்தைகளை ஜின் (வானவரிடமிருந்து) ஒத்துக்கேட்டு வந்து தம் (சோதிட) நண்பனின் காதில் சேவல் கொக்கரிப்பது போல் போட்டு விடுகிறது. சோதிடர்கள் அதனுடன் நூற்றுக்கும் அதிகமான பொய்களைக் கலந்து விடுகின்றனர்' என்று கூறினார்கள்

ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்: சில நபர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சோதிடர்கள் குறித்து வினவினர். அதற்கு 'அவர்கள் குறித்து கருத்திற் கொள்ளத் தேவையில்லை' என அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்குப் பதிலளித்தார்கள். அதற்கு அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவ்வாறாயின், சோதிடர்கள் சில வேளைகளில் ஒன்றைப் பற்றி அறிவிக்க அது உண்மையாகி விடுகிறதே (அது எப்படி?)' என்று வினவினர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'அந்த உண்மையான வார்த்தைகளை ஜின் (வானவரிடமிருந்து) ஒத்துக்கேட்டு வந்து தம் (சோதிட) நண்பனின் காதில் சேவல் கொக்கரிப்பது போல் போட்டு விடுகிறது. சோதிடர்கள் அதனுடன் நூற்றுக்கும் அதிகமான பொய்களைக் கலந்து விடுகின்றனர்' என்று கூறினார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள மறைவான விடயங்களைப் பற்றி அறிவிக்கும் சோதிடர்களைப் பற்றி சிலர் நபியவர்களிடம் வினவ, அதற்கு அவர்கள், அவர்களைப் பொருட்படுத்த வேண்டாம், அவர்களது பேச்சுக்களை எடுக்கவும் வேண்டாம், அவர்களை கணக்கில் கொள்ள வேண்டாம் எனக் கூறினார்கள். அப்போது சிலர் அவர்கள் கூறுவது யதார்த்தத்திற்கு உடன்படுகின்றதே, இன்ன மாதத்தில், இன்ன தினத்தில் நடைபெறும் என மறைவான ஒன்றை அவர்கள் அறிவித்தால் அவர்களது கூற்றுப் பிரகாரமே நடக்கின்றதே எனக் கேட்டனர். வானத்தில் பேசப்படும் செய்திகளை ஒத்துக்கேட்டு, தமது சோதிட நேசர்களிடம் இறங்கி தாம் கேட்டவற்றைக் கூறி விடுகின்றனர், பின் அந்த சோதிடன் தான் கேட்டவற்றில் மேலும் நூறு பொய்களைக் கலந்து விடுகின்றான் என நபியவர்கள் விளக்கமளித்தார்கள்.

فوائد الحديث

சோதிடர்களை நம்புவது தடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் கூறுவது சில வேளை உண்மையானாலும் பெரும்பாலும் இட்டுக்கட்டி, பொய்யே கூறுகின்றனர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்; தூதராக அனுப்பப்பட்டது முதல் வஹி அல்லது அதுவல்லாத விடயங்களை ஷைத்தான்கள் செவியுறுவதை விட்டும் வானுலகம் பாதுகாக்கப்பட்டுள்ளது. என்றாலும் கீழ் வானிலிருந்து சிலர் ஒத்துக்கேட்டு தீப்பந்ததத் திலிருந்து தப்பி விடுகின்றனர். இவர்களே திருட்டுத்தனமாக சில விடயங்களை கேட்டு மனிதர்களில் அவர்களுக்கு நெருக்கமான சிலரிடம் கூறிவிடுகின்றனர்.

ஜின்கள் மனிதர்களில் தமது நேசர்களைத் தேர்ந்தெடுக்கின்றார்கள்.

التصنيفات

வணக்க வழிபாடுகளில் ஏகத்துவம், ஜாஹிலிய்ய விடயங்கள்