நான்தான் ளிமாம் இப்னு ஸஃலபா, அதாவது பனூ ஸஃது இப்னு பக்ரின் சகோதாரன்' என்றும் கூறினார்'' என அனஸ் இப்னு…

நான்தான் ளிமாம் இப்னு ஸஃலபா, அதாவது பனூ ஸஃது இப்னு பக்ரின் சகோதாரன்' என்றும் கூறினார்'' என அனஸ் இப்னு மாலிக்(ரழியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்: நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களுடன் நாங்கள் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது ஒட்டகத்தின் மீது அமர்ந்தவராக ஒருவர் பள்ளிக்குள் நுழைந்தார். பள்ளியினுள்ளே ஒட்டகத்தைப் படுக்க வைத்துப் பின்னர் அதனைக் கட்டினார். பின்பு அங்கு அமர்ந்திருந்தர்களிடம் 'உங்களில் முஹம்மத் அவர்கள் யார்?' என்று கேட்டார். நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களோ மக்களிடையே சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். 'இதோ சாய்ந்து அமர்ந்திருக்கும் இந்த வெள்ளை மனிதர்தாம் (முஹம்மத்(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள்)' என்று நாங்கள் கூறினோம். உடனே அம்மனிதர் நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களை 'அப்துல் முத்தலிபின் பேரரே!' என்றழைத்தார். அதற்கு நபியவர்கள் 'என்ன விடயம்?' என்று கேட்டார்கள். அப்போது அம்மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் 'நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன். சில கடினமான கேள்விகளையும் கேட்கப் போகிறேன். அதற்காக நீங்கள் என்னுடன் -வருத்தப்படக்- கோபப்படக் கூடாது' என்றார். அதற்கவர்கள் 'நீர் விரும்பியதைக் கேளும்' என்றார்கள். உடனே அம்மனிதர் 'உமதும்; உமக்கு முன்பிருந்தோரினதும் இரட்சகன் மீது ஆணையாகக் கேட்கிறேன் அல்லாஹ்தான் உம்மை மனித இனம் முழுமைக்கும் தூதராக அனுப்பினானா?' என்றார். அதற்கு அவர்கள் 'அல்லாஹ் சாட்சியாக ஆம்!' என்றார்கள். அடுத்து அவர் 'அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு உம்மிடம் கேட்கிறேன் அல்லாஹ்தான் இரவிலும், பகலிலுமாக நாங்கள் ஐந்து நேரத் தொழுகையைத் தொழுது வரவேண்டுமென்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?' என்றார். அதற்கவர்கள் 'ஆம்! அல்லாஹ் சாட்சியாக' என்றார்கள். அடுத்து அவர் 'இறைவன் மீது ஆணையாக உம்மிடம் கேட்கிறேன் அல்லாஹ்தான் ஒவ்வோர் ஆண்டிலும் குறிப்பிட்ட இந்த மாதத்தில் நாங்கள் நோன்பு நோற்க வேண்டும் என்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?' என்றார். அதற்கவர்கள் 'ஆம்! அல்லாஹ் சாட்சியாக' என்றார்கள். அடுத்து அவர், 'இறைவன் மீது ஆணையாக உம்மிடம் கேட்கிறேன் அல்லாஹ்தான் எங்களில் வசதி படைத்தவர்களிடமிருந்து இந்த (ஸகாத் என்னும்) தர்மத்தைப் பெற்று எங்களில் வறியவர்களுக்கு நீர் அதனை வினியோகிக்க வேண்டுமென்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?' என்றார். அதற்கு நபி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம அவர்கள் 'ஆம் (இறைவன் மீது சாட்சியாக' என்றார்கள். உடனே அம்மனிதர் 'நீங்கள் (இறைவனிடமிருந்து) கொண்டு வந்தவற்றை நான் நம்பி ஏற்கிறேன்' என்று கூறிவிட்டு 'நான், என்னுடைய கூட்டத்தார்களில் இங்கு வராமல் இருப்பவர்களின் தூதுவனாவேன். நான்தான் ளிமாம் இப்னு ஸஃலபா, அதாவது பனூ ஸஃது இப்னு பக்ரின் சகோதாரன்' என்றும் கூறினார்'' என அனஸ் இப்னு மாலிக்(ரழியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

ஸஹாபாக்கள் நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களுடன்; பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது திடீரென ஒட்டகத்தின் மீது அமர்ந்த ஒருவர் பள்ளிக்குள் நுழைந்தார். ஒட்டகத்தைப் படுக்க வைத்துப் பின்னர் அதனைக் கட்டினார். என அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். பின்னர் அவர் ,அமர்ந்திருந்த ஸஹாபாக்களிடம் உங்களில் முஹம்மத் யார்? என வினவினார். நபியவர்களோ கூட்டத்திற்கு மத்தியில் சாய்ந்து கொண்டிருந்த நிலையில், நாம் இதோ சாய்ந்து கொண்டிருக்கும் வெள்ளை மனிதர்தாம் முஹம்மத் என்று கூறினோம். வந்த மனிதர் அப்துல் முத்தலிபின் மகனே : என நபியவர்களைப் பார்த்து விளித்துப்பேச, நபியவர்கள் அவரிடம் நீங்கள் கூறுவதை நான் செவி மடுத்தேன்; நீங்கள் கேளுங்கள் நான் உமக்கு பதிலளிக்கிறேன். வந்த மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் 'நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன். சில கடினமான கேள்விகளையும் கேட்கப் போகிறேன். அதற்காக நீங்கள் என்னுடன் -வருத்தப்படக்- கோபப்பட வேண்டாம்' என்றார். அதாவது நீங்கள் கோபிக்கக் கூடாது அத்துடன் ஏதும் சிரமத்திற்கு உள்ளாக வேண்டாம். அதற்கு நபியவர்கள் நீ விரும்பியதைக் கேள் என்று அவரிடம் கூறினார்கள். 'உமதும், உமக்கு முன்பிருந்தோரினதும் இரட்சகன் மீது ஆணையாகக் கேட்கிறேன் அல்லாஹ்தான் உம்மை மனித இனம் முழுமைக்கும் தூதராக அனுப்பினானா?' அதற்கு நபியவர்கள் அல்லாஹ்வை சாட்சியாக வைத்து ஆம் என்று கூறினார்கள் 'அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு உம்மிடம் கேட்கிறேன் அல்லாஹ்தான் இரவிலும், பகலிலுமாக நாங்கள் ஐந்து நேரத் தொழுகையைத் தொழுது வரவேண்டு மென்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?அதாவது கடமையான தொழுகைகளை இது குறிக்கிறது. இதற்கு நபியவர்கள் அல்லாஹ் சாட்சியாக ஆம் எனக் கூறினார்கள் 'இறைவன் மீது ஆணையாக உம்மிடம் கேட்கிறேன் அல்லாஹ்தான் ஒவ்வோர் ஆண்டிலும் குறிப்பிட்ட மாதமாகிய ரமழான் மாதத்தில் நாங்கள் நோன்பு நோற்க வேண்டும் என்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?' என்றார். அதற்கு நபியவர்கள் அல்லாஹ் சாட்சியாக ஆம் எனக் கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக உம்மிடம் கேட்கிறேன் அல்லாஹ்தான் எங்களில் வசதி படைத்தவர்களிடமிருந்து இந்த (ஸகாத் என்னும்) தர்மத்தைப் பெற்று எங்களில் வறியவர்களுக்கு வினியோகிக்க வேண்டுமென்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?' தர்மம் என்பது இங்கு ஸகாத்தைக் குறிக்கும். அதற்கு நபியவர்கள் அல்லாஹ் சாட்சியாக ஆம் எனக் கூறினார்கள். ழிமாம் அவர்கள்; இஸ்லாத்தை தழுவினார் நபி ஸல்லல்லாஹு அவர்கள் அவர் தனது சமூகத்தாரை இஸ்லாத்தின் பால் அழைப்பு விடுப்பார் என்று அறிவித்தார்கள். பின் அந்த மனிதர்; தான் ழிமாம் இப்னு ஸஃலபா ஸஃத் இப்னு பக்ர் வம்சத்தை சேர்ந்தவர்; என்று தம்மை அறிமுகப்படுத்தினார்.

فوائد الحديث

வந்த மனிதர் நபியவர்களுக்கும்,தோழர்களுக்கும் மத்தியில் வித்தியாசத்தை அறிந்து கொள்ள முடியாத அளவு அவர்களுடன் நபியவர்கள் இரண்டரக் கலந்திருந்திருந்தார்கள் இது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பணிவை காட்டுகிறது.

நபியவர்களின் நற்குணம்; தன்னிடம் கேள்வி கேட்டவருக்கு பதிலளிப்பதில் இங்கிதமாய் நடந்து கொண்டமை போன்றவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிறப்பான முறையில் பதிலளிப்பது பிரச்சாரம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான காரணங்களில் ஒன்றாகும்.

ஒரு மனிதரை அறிமுகப்படுத்தும் நோக்கில் குறைகூறும் விதமாக அல்லாது குறித்த மனிதர் விரும்பினால் அவரை வெள்ளை,சிவப்பு,உயரம்,கட்டை போன்ற பண்புளால் குறிப்பிடுவது அனுமதிக்கப்பட்டதாகும்.

காபிர்- முஸ்லிமல்லாதவர்- தேவைக்காக பள்ளிக்குள் நுழைவது அனுமதிக்கப்பட்டதாகும்.

இங்கே ஹஜ் கடமை குறிப்பிடப்படவில்லை, காரணம் அவர் வந்த வேளை ஹஜ் விதியாக்கப்படாது இருந்திருக்க முடியும்.

மக்களை சத்திய இஸ்லாத்தை நோக்கி அழைப்பதில் ஸஹாபாக்களுக்கு இருந்த பேரார்வம் இந்த ஹதீஸில் பிரதிபளிக்கிறது. அவர்கள் இஸ்லாத்தை தழுவியதும் தனது சமூகத்தாருக்கும் அதனை எத்திவைப்பதில் அதீத ஆர்வம் கொண்டிருந்தமையை இந்த சம்பவத்தில் காண முடிகிறது.

التصنيفات

வல்லமையும் கீர்த்தியும் மிக்க அல்லாஹ்வின் மீது விசுவாசம் கொள்ளல்., நம் தூதர் முஹம்மத் (ஸல்), இஸ்லாம், அல்லாஹ்வின் பக்கம் அழைத்தல், தொழுகையின் அவசியமும் அதனை விட்டுவிடுபவருக்கான சட்டமும், ஸகாதின் அவசியமும் அதனை விட்டுவிடுபவருக்கான சட்டமும்