அல்லாஹ்வும் இன்னாரும் நாடியது என்று கூறாதீர்கள். மாறாக அல்லாஹ் நாடினான் பின்னர் இன்னாரும் நாடினார் என்று…

அல்லாஹ்வும் இன்னாரும் நாடியது என்று கூறாதீர்கள். மாறாக அல்லாஹ் நாடினான் பின்னர் இன்னாரும் நாடினார் என்று கூறுங்கள்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வும் இன்னாரும் நாடியது என்று கூறாதீர்கள். மாறாக அல்லாஹ் நாடினான் பின்னர் இன்னாரும் நாடினார் என்று கூறுங்கள்".

الشرح

ஒரு முஸ்லிம் தனது பேச்சில் 'மாஷா அல்லாஹ் வஷாஅ புலான்' ( குறித்த விடயமானது அல்லாஹ்வின் விருப்பப்படியும், குறித்த நபரின்; விருப்பப்படியும் நடந்தது) அல்லாஹ்வும் இன்னாரும் நாடியது, அல்லது 'மாஷாஅல்லா வபுலான்' அல்லாஹ்வினதும்; குறித்த நபரினதும் விருப்பப்படி நடந்துவிட்டது என்று கூறுவதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தடுத்துள்ளார்கள். காரணம் அல்லாஹ்வின் நாட்டம் மற்றும் அவனின் விருப்பம் பொதுவானது அதில் எவரும் கூட்டுச்சேர முடியாது. குறித்த வசனத்தில் 'வாவ் ' என்ற எழுத்தானது வாவுல் அத்ப் ஆகும். அது ஒருவிடயத்தை சமமாக இணைத்துச் சொல்வதற்கு பாவிக்கப்படும் எழுத்தாகும். அந்தவகையில் அது அல்லாஹ்வுடன் ஒருவர் சமமாக கூட்டுச்சேர்வதை காட்டுகிறது ஆகையால் அவ்வாறு பாவிப்பது தடுக்கப்பட்டுள்ளது. என்றாலும் மாஷாஅல்லாஹு ஸும்ம ஷாஆ புலான்' அதாவது அல்லாஹ் நாடியதன் பின் குறித்த மனிதன் நாடியதும் நிகழ்ந்து விட்டது என்று கூறுவதில் எந்தத் தடையுமில்லை. ஆக அடியானின் விருப்ப-நாட்ட-மானது அல்லாஹ்வின் நாட்டத்தை பின்பற்றியதாக உள்ளது. இதனையே நபியவர்கள் 'வாவுக்குப் பதிலாக ஸும்ம என்ற முன்இடைச்சொல்லை பயன்படுத்தியுள்ளார்கள். ஸும்ம என்பது ஒரு விடயம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து அல்லது பின்னால் அல்லது தாமதித்து நிகழும் அனைத்திற்கும் பயன்படுத்தப்படும் முன்னிடைச்சொல்லாகும்.

فوائد الحديث

'மாஷாஅல்லாஹு வஷிஃத' அல்லாஹ்வும் நீயும் நாடியது' என்பது போன்ற அல்லாஹ்வை அடியானுடம் சமப்படுத்தும் வாசகங்களை பயன்படுத்துவது ஹராமாகும். காரணம் இவை சொற்கள் மற்றும் வார்த்தைகள் சார்ந்த இணைவைப்பாகும்.

'மாஷாஅல்லாஹு ஸும்ம ஷிஃத' என்பது போன்ற வாசகங்களை பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டதாகும். காரணம் இதில் ஸும்ம என்ற சொல்லானது மேற்படி ஆபத்தான கருத்தை நீக்கிவிடுகிறது.

அல்லாஹ்வுக்கும், அடியானுக்கும் நாட்டசக்தி இருப்பதை இந்த ஹதீஸ் உறுதிப்படுத்துவதோடு அடியானின் நாட்டமானது அல்லாஹ்வின் நாட்டத்தை அடியொட்டியே அமையும் என்பதை தெளிவு படுத்துகிறது.

அல்லாஹ்வின் நாட்டத்தில் வார்த்தையளவில் கூட படைப்பினங்களை இணையாக்குவது தடுக்கப்பட்டிருத்தல்.

எல்லா வகையிலும் அடியானின் நாட்டம் அல்லாஹ்வின் நாட்டத்தை ஒத்தது என்று கூறுபவர் மனதால் உறுதியாக நம்பினால் அல்லது அடியானுக்கு என சுயமான நாட்டம் உண்டு என நம்பினால் அது பெரியவகை இணைவைப்பாக அமைந்து விடும். அவ்வாறு இல்லாத நிலையில் அது சிறியவகை ஷிர்க்காக அமைந்து விடும்.

التصنيفات

வணக்க வழிபாடுகளில் ஏகத்துவம்