'நான் உங்களிடம் தஜ்ஜாலைப் பற்றிய செய்தி ஒன்றைச் சொல்லப்போகிறேன்; வேறெந்த இறைத்தூதரும் அதைத் தம்…

'நான் உங்களிடம் தஜ்ஜாலைப் பற்றிய செய்தி ஒன்றைச் சொல்லப்போகிறேன்; வேறெந்த இறைத்தூதரும் அதைத் தம் சமூகத்தாருக்குச் சொன்னதில்லை. அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். அவன் தன்னுடன் சொர்க்கம், நரகம் போன்றவற்றைக் கொண்டுவருவான்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'நான் உங்களிடம் தஜ்ஜாலைப் பற்றிய செய்தி ஒன்றைச் சொல்லப்போகிறேன்; வேறெந்த இறைத்தூதரும் அதைத் தம் சமூகத்தாருக்குச் சொன்னதில்லை. அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். அவன் தன்னுடன் சொர்க்கம், நரகம் போன்றவற்றைக் கொண்டுவருவான். அவன் எதைச் சொர்க்கம் என்று கூறுகின்றானோ அதுதான் நரகமாக இருக்கும். நூஹ் அவர்கள் அவனைக் குறித்துத் தம் சமூகத்தாரை எச்சரித்ததைப் போன்று நானும் உங்களை (அவனைக் குறித்து) எச்சரிக்கின்றேன்'.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தஜ்ஜாலின் குணவியல்புகள் மற்றும் அவனின் அடையாளங்கள் பற்றி இதற்கு முன் எந்த நபியும் கூறாத பல விடயங்களை தனது தோழர்களுக்கு குறிப்பிட்டார்கள் அவற்றில் சில பின்வருமாறு : அவன் ஒற்றைக் கண்ணுடையவன். கண்ணின் பார்வைக்குட்டபட்டதாக சுவர்க்கத்தையும் நரகத்தையும் அல்லாஹ் அவனிடம் கொடுத்திருப்பான். என்றாலும் அவனிடமிருக்கும் சுவர்க்கம் நரகமாகவும் நரகம் சுவர்க்கமாகவும் இருக்கும். யார் அவனுக்குக் கட்டுப்படுகின்றானோ அவனை மக்கள் சுவர்க்கம் எனக்கருதுகின்ற அந்த சுவர்க்கத்தில் நுழைவிப்பான். ஆனால் அது சுட்டெரிக்கும் நெருப்பாக இருக்கும். யார் அவனுக்குக் கட்டுப்படவில்லையோ அவனை மக்கள் நரகம் எனக்கருதுகின்ற அந்த நரகத்தில் அவன் நுழைவிப்பான். என்றாலும் அது உண்மையான அழகிய இன்பமான சுவர்க்கமாக இருக்கும். பின்னர் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் நூஹ் அலை அவர்கள் தனது சமூகத்தை எச்சரித்தது போன்று தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் எங்களை எச்சரித்தார்கள்.

فوائد الحديث

தஜ்ஜாலின் மிகப்பெரும் குழப்பங்கள் குறித்து விளக்கபட்டுள்ளமை.

அல்லாஹ்; மீதான உண்மையான நம்பிக்கை- (இறைவிசுவாசம்), மிக உயர்ந்தோனாகிய அல்லாஹ்வின் பக்கம் திரும்புதல், கடைசி அத்தஹய்யாத்தில் அவனிடம் இருந்து பாதுகாவல் தேடுதல் மற்றும் சூரா அல்-கஃப்பின் தொடக்க பத்து வசனங்களை மனப்பாடம் செய்தல் ஆகிய விடயங்கள் மூலம் தஜ்ஜாலின் பிரச்சனைகளிலிருந்து விடுதலை பெற முடியும்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது சமூகத்தார் மீது கொண்டிருந் ஆர்வமும் கருணையும். இதனால் அவர்களுக்கு முன் வந்த நபிமார்கள் தெளிவுபடுத்தாத தஜ்ஜாலின் குணங்களைப் பற்றி விளக்கிக் கூறினார்கள்.

التصنيفات

இறுதி நாள் மீது விசுவாசம் கொள்ளுதல், மறுமையின் அடையாளங்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் கருணை