இந்த சந்திரனை நீங்கள் தடங்கலின்றி (தெளிவாக கஷ்டமின்றி) காண்பது போல் நிச்சயமாக உங்களுடைய இறைவனைக் காண்பீர்கள்!

இந்த சந்திரனை நீங்கள் தடங்கலின்றி (தெளிவாக கஷ்டமின்றி) காண்பது போல் நிச்சயமாக உங்களுடைய இறைவனைக் காண்பீர்கள்!

ஜரீர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'நாங்கள் முழு நிலவுள்ள-பௌர்னமி- இரவில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் முழு சந்திரனை நோக்கி 'இந்த சந்திரனை நீங்கள் தடங்கலின்றி (தெளிவாக கஷ்டமின்றி) காண்பது போல் நிச்சயமாக உங்களுடைய இறைவனைக் காண்பீர்கள்! சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப் படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள்!' என்று கூறினார்கள்'. பின்னர் நபியவர்கள் (வஸப்பிஹ் பிஹம்திரப்பிக) என்ற வசனத்தை ஓதினார்கள்' பொருள் : சூரிய உதயத்திற்கு முன்னறும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னரும் உனது இரட்சனின் புகழைக் கொண்டு துதிப்பீராக'

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நபித் தோழர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஓர் இரவில் - பதினான்காம் இரவில்- இருக்கும் போது சந்திரனைப் பார்த்து: நிச்சயமாக முஃமின்கள் தமது வெற்றுக் கண்களால் எவ்விதத் தடையுமின்றி தெளிவாக தங்களது இரட்சகனை காண்பார்கள் என்றார்கள். மேலும் அவர்கள் தங்களது இரட்சகனை பார்ப்பதில் நெரிசல்களுக்கு உள்ளாக மாட்டார்கள், அவனை காண்பதில் அவர்களுக்கு எவ்வித களைப்போ சிரமமோ ஏற்படாது எனவும் குறிப்பிட்டார்கள'; பின்னர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள் : பஜ்ர் மற்றும் அஸ்ர் தொழுகைகளை விட்டும் உங்களை திசைதிருப்பக் கூடிய விடயங்களை விட்டும் தவிர்த்து இதனை செய்ய முடியுமென்றால் இந்த இரு தொழுகைகளையும் பூரணமாக அதற்குரிய நேரத்தில் கூட்டாக- ஜமாஅத்தாக தொழுது வாருங்கள்;.அவ்வாறு நீங்கள் தொழுது வருவது அல்லாஹ்வின் திருமுகத்தை மறுமையில் காண்பதற்கான வழிகளில் ஒன்றாக அமைந்து விடும். இவ்வாறு கூறிவிட்டு பின்வரும் வசனத்தை நபியவர்கள் ஓதினார்கள் : "சூரிய உதயத்திற்கு முன்னும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னும் உனது இரட்சகனை புகழ்வதின் மூலம் துதிசெய்வீராக".

فوائد الحديث

விசுவாசிகள் மறுமையில் அல்லாஹ்வைக் காண்பார்கள், என்ற நற்செய்தியை இந்நபிமொழி உறுதிப்படுத்துகின்றது.

ஒன்றை வலியுறுத்திக் கூறுவதும், ஊக்குவிப்பதும், உதாரணங்கள் கூறுவதும் அழைப்புப் பணியின் வழிமுறைகளில் உள்ளவையாகும்.

التصنيفات

மறுமை வாழ்வு