இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'உங்கள் (உலக) நெருப்பு, நரக

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'உங்கள் (உலக) நெருப்பு, நரக

அல்லாஹ்வின் தூதர் கூறியதாகஅபூ ஹுரைரா(ரழியல்லாஹு அன்ஹு) அறிவித்துள்ளார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது மடங்குகளில் ஒன்றாகும்;. என்று கூறினார்கள். உடனே, 'இறைத்தூதர் அவர்களே! இந்த (உலக) நெருப்பே (பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப்படுத்தப்) போதுமானதாயிற்றே'' என்று கேட்கப்பட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம அவர்கள்,'(அப்படியல்ல.) உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது மடங்கு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்' என்றார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

மேற்குறிப்பிட்ட ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உலக நெருப்பானது நரக நெருப்பின் எழுபது மடங்காகும் எனக் குறிப்பிட்டுள்ளார்கள். மறுமையின் நெருப்பானது உலக வெப்பத்தை விட 69 மடங்கு வெப்பத்தால் அதிகமானதாகும்.அதில் உள்ள ஒவ்வொரு பகுதியும் உலக நெருப்பின் வெப்பத்திற்கு சமமானதாக இருக்கிறது. அல்லாஹ்வின் தூதரே! உலக நெருப்பானது நரகத்தினுள் நுழைவோரை வேதனை செய்வதற்கு போதுமானதாகும் என நபியவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.அவை ஒவ்வொன்றும் வெப்பத்தில் சமமானவையாகும்.

فوائد الحديث

நரகத்திற்கு வழிவகுக்கும் செயல்களிலிருந்து மக்கள் விலகி நடக்க வேண்டும் என்பதற்காக நரகத்தை விட்டும் எச்சரிக்கை செய்தல்.

நரக நெருப்பு மற்றும் அதன் வேதனையின் பிரமாண்டமும், அதன் கடும் வெப்பமும் இங்கு குறிப்பிடப்பட்டிருத்தல்.

التصنيفات

இறுதி நாள் மீது விசுவாசம் கொள்ளுதல், சுவனம் மற்றும் நரகின் தன்மைகள்