யாராவது அதானைக் கேட்ட போது, 'அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவதித் தாம்மா, வஸ்ஸலாதில் காஇமா, ஆதி முஹம்மதனில் வஸீலத…

யாராவது அதானைக் கேட்ட போது, 'அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவதித் தாம்மா, வஸ்ஸலாதில் காஇமா, ஆதி முஹம்மதனில் வஸீலத வல் பழீலா, வப்அஸ்ஹு மகாமன் மஹ்மூதனில்லதீ வஅத்தஹ்' என்று கூறுகின்றாரோ, அவருக்கு மறுமையில் எனது சபாஆ (பரிந்துரை) கிடைக்கும். துஆவின் அர்த்தம் : யா அல்லாஹ் இந்த முழுமையான அழைப்பினதும் நிலையான தொழுகையினதும் ரப்பே! முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வசீலா என்னும் அந்தஸ்தையும், சிறப்பையும் கொடுப்பாயாக! நீ வாக்களித்திருக்கின்ற புகழுக்குரிய அந்தஸ்துக்கு அவரை அனுப்புவாயாக

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்: யாராவது அதானைக் கேட்ட போது, 'அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவதித் தாம்மா, வஸ்ஸலாதில் காஇமா, ஆதி முஹம்மதனில் வஸீலத வல் பழீலா, வப்அஸ்ஹு மகாமன் மஹ்மூதனில்லதீ வஅத்தஹ்' என்று கூறுகின்றாரோ, அவருக்கு மறுமையில் எனது சபாஆ (பரிந்துரை) கிடைக்கும். துஆவின் அர்த்தம் : யா அல்லாஹ் இந்த முழுமையான அழைப்பினதும் நிலையான தொழுகையினதும் ரப்பே! முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வசீலா என்னும் அந்தஸ்தையும், சிறப்பையும் கொடுப்பாயாக! நீ வாக்களித்திருக்கின்ற புகழுக்குரிய அந்தஸ்துக்கு அவரை அனுப்புவாயாக.

[சரியானது] [இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்]

الشرح

இங்கு நபியவர்கள் தெளிவுபடுத்துவது என்னவென்றால் யாராவது ஒரு முஸ்லிம் பாங்கு சொல்வதைக் கேட்டு பின்னர், (யா அல்லாஹ்! இந்த முழுமையான) அதாவது இறைத்தூதினதும், ஓரிறைக் கொள்கையினிதும் பரிபூரணமான (அழைப்பின் ரப்பே) அதாவது அல்லாஹ்வை வணங்கவும், தொழுகையை நிலைநாட்டவும் விடுக்கப்படும் அழைப்பு (நிலையான தொழுகை) என்ற நிலை நாட்டப்படும் தொழுகை (முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வசீலாவையும்) இது நபியவர்களுக்கு மாத்திரம் தகுதியான சுவனத்தின் ஓர் உயர்ந்த அந்தஸ்தாகும் (சிறப்பையும் கொடுப்பாயாக) அதாவது ஏனைய படைப்புக்களை விட உயர்ந்த அந்தஸ்தை அவர்களுக்கு கொடுப்பாயாக (அவர்களை புகழப்பட்ட அந்தஸ்துக்கு அனுப்புவாயாக) அதாவது புகழுக்குரிய அந்தஸ்தாகிய மறுமையில் உள்ள மகத்துவமிக்க சபாஆ (அதாவது நீ அதனை அவர்களுக்கு வாக்களித்துள்ளாய்) அதாவது, 'உம்முடைய இறைவன், “மகாமம் மஹ்முதா” என்ற (புகழ் பெற்ற) தலத்தில் உம்மை எழுப்பப் போதும்' என்ற வசனத்தின் மூலம் அது நபியவர்களுக்கு உரியது என்று அல்லாஹ் வாக்களித்துள்ளான். இந்த துஆவை யார் ஓதுகின்றாரோ அவருக்கு மறுமையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிந்துரை கட்டாயமாகி விடும்.

فوائد الحديث

பாங்குக்கு பதில் அளித்துவிட்டு இந்த துஆவை ஓதுவது மார்க்கம் காட்டித் தந்துள்ள ஒன்றாகும். பாங்கு சத்தம் கேட்காதவர் இதை ஓதமாட்டார்.

இங்கு நபியவர்களின் சிறப்பு உணர்த்தப் படுகின்றது. அதாவது, வஸீலா, பலீலா, அல் மகாமுல் மஹ்மூத் மற்றும் படைப்புக்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்குவதற்காக செய்யப்படும் மகத்துவம் மிக்க பரிந்துரை போன்ற சிறப்பம்சங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

'என்னுடைய பரிந்துரை அவருக்கு கிடைக்கும்' என்பதன் ஊடாக நபியவர்களுக்கு மறுமையில் ஷஃபா உள்ளது என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது.

நபியவர்களின் சபாஆ என்பது தனது உம்மத்தில் பெரும் பாவம் செய்தவர்கள் நரகம் நுழையாமல் இருக்கவும், அவ்வாறு நுழைந்தவர்கள் வெளியேறவும், மூமின்கள் விசாரணை இன்றி சுவனம் நுழையவும், நுழைந்தவர்களின் அந்தஸ்துக்கள் உயர்த்தப்படவும் நபியவர்கள் சிபாரிசு செய்வதாகும்.

தீபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் : பாங்கின் ஆரம்பம் தொடக்கம் 'முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் வரையுள்ளது 'முழுமையான அழைப்பாகும்' ஹையா அலஸ் ஸலாஹ், ஹையா அலல் பலாஹ் ஆகியவை நிலையான தொழுகையாகும். "அவர்கள் தொழுகையை நிலை நாட்டுவார்கள்" என்ற வசனத்திலிருந்து அது பெறப்பட்டுள்ளது. இங்கு ஸலாத் என்பதன் மூலம் துஆ நாடப்படவும் முடியும். 'காஇமா' என்றால் 'நிலைத்து நிற்கக்கூடிய' என்று அர்த்தமும் கொடுக்கப்படலாம். எனவே அதன் அடிப்படையில், 'வஸ்ஸலாதில் காஇமா' என்பது தஃவதித் தாம்மா என்பதைத் தெளிவு படுத்துகின்றது. அந்த நேரம் அழைப்பு விடுக்கப் படும் அறிமுகமான தொழுகை நாடப்படுகின்றது என்றும் எடுக்கலாம். அதுவே இங்கு வெளிப்படையாக விளங்கும் அர்த்தமாகும்.

முஹள்ளப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : இந்த ஹதீஸில் தொழுகை நேரங்களில் துஆக் கேட்க ஆர்வமூட்டப்படுகின்றது. ஏனெனில் இது துவா ஏற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்க முடியுமான ஒரு சந்தர்ப்பம் ஆகும்.

التصنيفات

மறுமை வாழ்வு, அதானும் இகாமத்தும்