மறுமை நாளில் (மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில்) முதல்முதலாக மனிதர்களிடையே வழங்கப்படும் தீர்ப்பு கொலைகள்…

மறுமை நாளில் (மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில்) முதல்முதலாக மனிதர்களிடையே வழங்கப்படும் தீர்ப்பு கொலைகள் தொடர்பானதாகத் தான் இருக்கும்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். மறுமை நாளில் (மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில்) முதல்முதலாக மனிதர்களிடையே வழங்கப்படும் தீர்ப்பு கொலைகள் தொடர்பானதாகத் தான் இருக்கும்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

மறுமை நாளில் மனிதர்களுக்கு மத்தியில் நிகழ்ந்த, அநியாயம் தொடர்பில் கொலை மற்றும் காயப்படுத்தியமை பற்றியே முதலாவாதாக தீர்ப்பளிக்கப்படும் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

فوائد الحديث

மறுமையில் விசாரிக்கப்படும் குற்றங்கள் தொடர்பான விடயங்களில் மிகப்பிரதானமான ஒன்று என்றவகையில் கொலைக்குற்றத்திற்கு முன்னுரிமை அளித்ததானது இதன் பாரதூரத்தன்மையை விளக்கப் போதுமான ஒன்றாகும்.

பாவங்களின் கனதியானது, அதனால் ஏற்படும் விளைவைப் பொறுத்ததாகும். அந்த வகையில் அப்பாவித்தனமான உயிர்களை பறிப்பது மிகப்பெரும் கொடுமையாகும். இதனை விடவும் மிகவும் கொடுமை நிறைந்ததாக இறைநிராகரிப்பும், இணைவைப்பும் காணப்படுகின்றன.

التصنيفات

மறுமை வாழ்வு, பழிதீர்த்தல்