(மறுமை நாளில்) உங்களில் எனது தடாகத்திற்கு நீர் அருந்த வருவோரை எதிர்பார்த்திருப்பேன்.அப்போது சிலர் என்னிடம்…

(மறுமை நாளில்) உங்களில் எனது தடாகத்திற்கு நீர் அருந்த வருவோரை எதிர்பார்த்திருப்பேன்.அப்போது சிலர் என்னிடம் வராது (அல்கவ்ஸர் தடாகத்தை விட்டு) தடுக்கப்படுவார்கள்;. உடனே நான் இறைவா! (இவர்கள்) என்னைச் சேர்ந்தவர்கள்; என் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அஸ்மா பின்த் அபீபக்ர் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவித்துள்ளார்கள்: (மறுமை நாளில்) உங்களில் எனது தடாகத்திற்கு நீர் அருந்த வருவோரை எதிர்பார்த்திருப்பேன்.அப்போது சிலர் என்னிடம் வராது (அல்கவ்ஸர் தடாகத்தை விட்டு) தடுக்கப்படுவார்கள்;. உடனே நான் இறைவா! (இவர்கள்) என்னைச் சேர்ந்தவர்கள்; என் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பேன். அதற்கு உங்களுக்குப் பின்னால் இவர்கள் செய்ததை நீங்கள் அறிவீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! இவர்கள் உங்கள் மரணத்திற்குப் பின் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றார்கள் என்று கூறப்படும்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

மறுமையில் தனது நீர் தடாகத்திற்கு நீர் அருந்த வருவோரை எதிர்பார்த்து காத்திருப்பதாக இந்த ஹதீஸில் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தெளிவுபடுத்துகிறார்கள். இதன் போது நபியவர்களின் முன்னே- அருகிலேயே சிலர் தடுக்கப்படுவார்கள் அப்போது நபியவர்கள் இறைவா! இவர்கள் என்னை சேர்ந்தவர்கள் எனது உம்மத்வர்கள் எனக் கூறுவார்கள். அவ்வேளை நபியவர்களின் புலம்பலுக்கு நீங்கள் அவர்களை விட்டு பிரிந்து சென்றதன் பின் என்ன செய்தார்கள் என்பது பற்றி உமக்குத் தெரியுமா? அதுதான் அவர்கள் தங்களது மார்க்கமான இஸ்லாத்தைத் துறந்து அவர்களின் பழைய வழியே சென்று விட்டனர்.ஆகவே அவர்கள் உம்மையோ உமது சமூகத்தையோ சார்ந்தோர் அல்லர் எனக் கூறப்படும்.

فوائد الحديث

தனது சமூகத்தவர் மீதான கருணையும் அவர்கள் குறித்த அதீத கரிசணையும்.

நபியவர்களின் வழிமுறைக்கு முரணாக செயற்டுவதினால்; மறுமையில் எதிர்கொள்ளும் ஆபத்தான விளைவு குறிப்பிடப்பட்டிருத்தல்.

நபியவர்களின் வழிமுறையை கடைப்பிடித்து ஒழுகுமாறு வலியுறுத்தப்பட்டிருத்தல்.

التصنيفات

இறுதி நாள் மீது விசுவாசம் கொள்ளுதல், மறுமை வாழ்வு, ஈமானின் கிளைகள்