ஈமானின் கிளைகள்

ஈமானின் கிளைகள்

2- 'சுத்தம் ஈமானின் பாதியாகும். 'الحمد لله' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று கூறுவது மீஸானின் நன்மையின் தட்டை நிரப்புகின்றது. 'سبحان الله' (அல்லாஹ் மிகத்தூய்மையானவன்) 'الحمد لله' ஆகிய இரண்டுமோ அல்லது ஒன்றோ, வானத்திற்கும் பூமிக்கும் இடையே இருப்பதை நிரப்பி விடுகின்றது

3- நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அன்ஸாரிகள் குறித்து இவ்வாறு கூறினார்கள் "அவர்களை உண்மை இறைவிசுவாசியைத் தவிர வேறு யாரும் நேசம் கொள்ளவும் மாட்டார். நயவஞ்சகனைத் தவிர வேறு யாரும் அவர்களை வெறுக்கவும் மாட்டார்.யார் அவர்களை நேசிக்கிறாரோ அவர்களை அல்லாஹ் நேசிக்கிறான். யார் அவர்களை வெறுக்கிறாரோ அவர்களை அல்லாஹ்வும் வெறுக்கிறான்