((காரிருள் போன்ற பெரும் குழப்பங்கள் வருவதற்குள் நற்காரியங்களை செய்வதற்கு விரைந்திடுங்கள்

((காரிருள் போன்ற பெரும் குழப்பங்கள் வருவதற்குள் நற்காரியங்களை செய்வதற்கு விரைந்திடுங்கள்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹூரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்: ((காரிருள் போன்ற பெரும் குழப்பங்கள் வருவதற்குள் நற்காரியங்களை செய்வதற்கு விரைந்திடுங்கள். அவ்வேளை ஒரு மனிதன்; காலையில் முஃமினாக இருந்து மாலையில் காபிராக மாறிவிடுவார், அல்லது மாலையில் முஃமினாக இருந்து காலையில் காபிராக மாறிவிடுவார். இவ்வுலகின் அற்பப் பொருளுக்காக தனது மார்க்கத்தையே விற்றுவிடுவார்.))

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

நற்காரியங்களை தடுத்து நிறுத்தக்கூடியதும் அதில் கவனம் செலுத்துவதை விட்டும் திசைதிருப்பக் கூடியதுமான குழப்பங்களும் மார்க்கம் பற்றிய சந்தேகங்களும் நிலவும் காலம் வரமுன் நற்காரியங்களை அதிகம் செய்வதற்கு விரைந்து செல்லுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வலியுறுத்துகிறார்கள். அக்காலம் இரவின் எல்லாப் பகுதிகள் போல் இருள் சூழ்ந்த நிலை காணப்படும். அதில் சத்தியமும் அசத்தியமும் கலந்திருக்கும் இதனால் மக்கள் சத்தியத்தை அசத்தியத்தியத்திலிருந்து வேறுபடுத்தி இனங்காண மிகச்சிரமப்படுவர். இச்சிரமம் காரணமாக முஃமினனான நிலையில் காலையை அடைந்த ஒரு மனிதன் மாலையாகும் போது காபிராக மாறிவிடுவார் அல்லது மாலையில் முஃமினாக இருந்த மனிதன் காலையாகும் போது காபிராக மாறிவிடுவார். இது அழிந்து போகும் இவ்வுலகின் அற்ப பொருளுக்கு தனது மார்க்கத்தை விட்டுவிடுவதினால் ஏற்படும் நிலையாகும்.

فوائد الحديث

நற்காரியங்கள் செய்வதற்கு தடையாக இருப்பவை வர முன் அவற்றை செய்ய விரைவதும் மார்க்கத்தை உறுதியாக பின்பற்றுவதும் கடமையாகும்.

இறுதிக்காலம் -உலக அழிவு – நெருங்குகையில் மனிதனை நேர்வழியிலிருந்து தடம் புறழச்செய்யும் குழப்பங்கள் தொடராக ஏற்படும் என்பது சுட்டிக் காட்டப்பட்டிருத்தல். அதாவது ஒரு குழப்பம் தோன்றி மறைவதற்குள் இன்னொரு குழப்பம் ஏற்படும் என்பது இதன் கருத்தாகும்.

ஒருவரின் மார்க்கப்பற்று பலவீனமுற்று செல்வம் போன்ற ஏனைய உலகவிவகாரங்களுக்காக மார்க்கத்தை உதரித்தள்ளும் போது, அதுவே அவனின் நெறிபிரழ்விற்கும் மார்க்கத்தை விட்டுவிடவும் பிரச்சினைகள் மற்றும் குழப்பங்களுக்கு அள்ளுண்டு போவதற்கும் வழிவகுக்கும்.

குழப்பங்களிலிருந்து மீற்சி பெறுவதற்கு காரணமாக நற்காரியங்கள் உள்ளன என்பதற்கான ஆதாரமாக இந்த ஹதீஸ் காணப்படுகிறது.

குழப்பங்கள் இருவகைப்படுகின்றன முதலாவது : சந்தேகம் எனும் குழப்பம் இதற்கான தீர்வு கல்வியாகும். இரண்டாவது மனோ இச்சைகள் எனும் குழப்பம் இதற்கான தீர்வு இறைவிசுவாசமும் பொறுமையும் ஆகும்.

யாருடைய அமல் குறைவாகக் காணப்படுகிறதோ அவர் கவர்ச்சிகளுக்கும் குழப்பங்களுக்கும் மிகவும் இலகுவாக உட்படுவார். யாரின் அமல் அதிகமாக உள்ளதோ அவர் மதிமயக்கத்தில் ஆழ்ந்துவிடாது தனது அமலை அதிகப்படுத்திக் கொள்ளவேண்டும் என இந்த ஹதீஸ் சுட்டிக்காட்டுகிறது.

التصنيفات

ஈமானின் கிளைகள்