நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அன்ஸாரிகள் குறித்து இவ்வாறு கூறினார்கள் "அவர்களை உண்மை இறைவிசுவாசியைத்…

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அன்ஸாரிகள் குறித்து இவ்வாறு கூறினார்கள் "அவர்களை உண்மை இறைவிசுவாசியைத் தவிர வேறு யாரும் நேசம் கொள்ளவும் மாட்டார். நயவஞ்சகனைத் தவிர வேறு யாரும் அவர்களை வெறுக்கவும் மாட்டார்.யார் அவர்களை நேசிக்கிறாரோ அவர்களை அல்லாஹ் நேசிக்கிறான். யார் அவர்களை வெறுக்கிறாரோ அவர்களை அல்லாஹ்வும் வெறுக்கிறான்

பராஉ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அன்ஸாரிகள் குறித்து இவ்வாறு கூறினார்கள் "அவர்களை உண்மை இறைவிசுவாசியைத் தவிர வேறு யாரும் நேசம் கொள்ளவும் மாட்டார். நயவஞ்சகனைத் தவிர வேறு யாரும் அவர்களை வெறுக்கவும் மாட்டார்.யார் அவர்களை நேசிக்கிறாரோ அவர்களை அல்லாஹ் நேசிக்கிறான். யார் அவர்களை வெறுக்கிறாரோ அவர்களை அல்லாஹ்வும் வெறுக்கிறான்".

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

மதீனாவைச் சேர்ந்தவர்களான அன்ஸாரிகளை நேசம் கொள்வது ஈமானின் பூரணத்துவத்திற்கான அடையாளம் எனக் குறிப்பிடுகிறார்கள். ஆரம்பத்திலேயே இஸ்லாத்திற்கும் நபியவர்களுக்கும் செய்த உதவியினாலும் மதீனா முஸ்லிம்களுக்கு அடைக்களம் வழங்கி அவர்களின் உடமைகள் மற்றும் உயிர்களினாலும் செய்த தியாகத்தினாலும் இந்த சிறப்பு அவர்களுக்கு கிடைத்துள்ளது. அத்துடன் அவர்களை வெறுப்பது நயவஞ்சத்தின் அடையாளம் எனவும் இந்த ஹதீஸில் நபியவர்கள் பிரஸ்தாபிக்கிறார்கள் . தொடர்ந்தும் நபியவர்கள் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் 'யார் அன்ஸாரிகளை நேசிக்கிறாரோ அவரை அல்லாஹ்வும் நேசிப்பதாகவும் யார் அவர்களை வெறுக்கிறாரோ அவரை அல்லாஹ் வேறுப்பதாகவும் தெளிவு படுத்துகிறார்கள்.

فوائد الحديث

இந்த ஹதீஸில் அன்ஸாரிகளுக்கான மிகப்பெரும் சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளமை. அதாவது அவர்களை நேசிப்பது ஈமானின் அடையாளமாகும், மேலும் நயவஞ்சகத்திலிருந்து தூய்மைபெற்றதற்கான அடையாளமுமாகும்.

அல்லாஹ்வின் நேசர்களை நேசித்து அவர்களுக்கு உதவி செய்வது அல்லாஹ் அடியானை நேசிப்பதற்கான ஒரு காரணமாகும்.

இஸ்லாத்தை ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்டோரின் சிறப்பு.

التصنيفات

ஈமானின் கிளைகள், நபித்தோழர்களின் சிறப்புகள்