சொர்க்கவாசிகள் தங்களுக்கு மேலேயுள்ள சிறப்பு அறைகளில் வசிப்பவர்களை அடிவானில் கிழக்கிலிருந்தோ…

சொர்க்கவாசிகள் தங்களுக்கு மேலேயுள்ள சிறப்பு அறைகளில் வசிப்பவர்களை அடிவானில் கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ பயணிக்கின்ற ஒளி வீசும் நட்சத்திரத்தைப் பார்ப்பதை போன்று பார்ப்பார்கள். அந்தஸ்தில் தமக்கும் அவர்களுக்குமிடையேயுள்ள ஏற்றத்தாழ்வின் காரணமாக அவ்வாறு பார்ப்பார்கள்.

சொர்க்கவாசிகள் தங்களுக்கு மேலேயுள்ள சிறப்பு அறைகளில் வசிப்பவர்களை அடிவானில் கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ பயணிக்கின்ற ஒளி வீசும் நட்சத்திரத்தைப் பார்ப்பதை போன்று பார்ப்பார்கள். அந்தஸ்தில் தமக்கும் அவர்களுக்குமிடையேயுள்ள ஏற்றத்தாழ்வின் காரணமாக அவ்வாறு பார்ப்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் இதைக் கேட்ட நபித் தோழர்கள்,"அல்லாஹ்வின் தூதரே அவை நபிமார்கள் தங்குமிடங்களா? அவற்றை மற்றவர்கள் அடைய முடியாதல்லாவா?" என்று கேட்டனர் அதற்கு நபி (ஸல்) அவர்கள்,"இல்லை, என் உயிரை தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக அங்கே தங்குபவர்கள் அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு இறைத் தூதர்களை உண்மையாளர்கள் என ஏற்றுக் கொண்டவர்களே ஆவார்கள்" எனபதிலளித்தார்

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

சொர்க்கவாசிகள் அவர்கள் பெற்றிருக்கும் சிறப்பின் தரங்களுக்கேற்ப அவர்களின் தங்குமிடங்கள் வித்தியாசப்படும். அதாவது அவர்களின் உயர்தரங்களில் உள்ளோர் அவர்களை விட தராதரங்களில் குறைந்தவர்களை காணும் போது அவர்கள் நட்சத்திரங்களை போன்று இருப்பர்.

التصنيفات

சுவனம் மற்றும் நரகின் தன்மைகள்