ஓர் அழைப்பாளி (மறுமையில்) அழைத்து இவ்வாறு கூறுவார் : நீங்கள் ஒரு போதும் நோய்வாய்ப்படாமல் ஆரோக்கியமாக…

ஓர் அழைப்பாளி (மறுமையில்) அழைத்து இவ்வாறு கூறுவார் : நீங்கள் ஒரு போதும் நோய்வாய்ப்படாமல் ஆரோக்கியமாக இருக்கலாம். நீங்கள் ஒரு போதும் மரணிக்காமல் உயிருடனே இருக்கலாம். நீங்கள் ஒருபோதும் முதுமையை அடையாமல் வாலிபத்திலேயே இருக்கலாம். ஒரு போதும் சிரமப்படாமல் இன்பத்திலேயே இருக்கலாம்

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஸஈத் (ரலி) மற்றும் அபூ ஹுரைரா (ரலி) ஆகியோர் அறிவிக்கின்றார்கள்: ஓர் அழைப்பாளி (மறுமையில்) அழைத்து இவ்வாறு கூறுவார் : நீங்கள் ஒரு போதும் நோய்வாய்ப்படாமல் ஆரோக்கியமாக இருக்கலாம். நீங்கள் ஒரு போதும் மரணிக்காமல் உயிருடனே இருக்கலாம். நீங்கள் ஒருபோதும் முதுமையை அடையாமல் வாலிபத்திலேயே இருக்கலாம். ஒரு போதும் சிரமப்படாமல் இன்பத்திலேயே இருக்கலாம். அதைத் தான் இவ்வசனம் கூறுகின்றது : "நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே நீங்கள் இந்த சுவனபதியின் வாரிசுகளாக்கப்பட்டு இருக்கிறீர்கள்” என்று அழைக்கப்படுவார்கள்."(ஸூரத்துல் அஃராஃப் : 43)

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

இங்கு நபியவர்கள், சுவனவாதிகள் சுவனத்தின் இன்பத்தில் இருந்துகொண்டிருக்கும் போது, ஒரு அழைப்பாளி அவர்களை அழைத்து இவ்வாறு கூறுவார் எனக் கூறுகின்றார்கள் : நீங்கள் இங்கு எந்த சிறிய நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக நிரந்தரமாக வாழலாம். நீங்கள், சிறிய மரணமாகிய, உறக்கம் கூட இல்லாமல் மரணமற்ற நிரந்தர வாழ்க்கை வாழலாம். நீங்கள் வயோதிபத்தை அடையாமல் நிரந்தரமாக வாலிபத்திலேயே இருக்கலாம். நீங்கள் கவலையும், சிரமமும் இல்லாமல் இன்பமாகவே வாழலாம். அதைத் தான் இவ்வசனம் கூறுகின்றது : "நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே நீங்கள் இந்த சுவனபதியின் வாரிசுகளாக்கப்பட்டு இருக்கிறீர்கள்” என்று அழைக்கப்படுவார்கள்."(ஸூரத்துல் அஃராஃப் : 43)

فوائد الحديث

உலக வாழ்வின் இன்பத்தை அனுபவிப்பவன் அதில் எவ்வளவு உச்சத்தில் இருந்தாலும், அதில் சிரமத்தை ஏற்படுத்தும் மிகப் பிரதானமான நான்கு அம்சங்கள் உண்டு: நோய், மரணம், முதுமை ஆகியவற்றுடன், எதிரிகள், வறுமை, யுத்தம் போன்வற்றினால் வரும் கவலைகளும், துன்பங்களுமே அந்த நான்குமாகும். சுவனவாதிகள் அதனை விட்டும் ஈடேற்றமாக இருப்பார்கள். எனவே, சுவனவாதிகளுக்கு பரிபூரணமான இன்பம் கிடைக்கும்.

சுவன இன்பங்கள், இவ்வுலகில் உள்ள இன்பங்களை விட்டும் வேறுபட்டுள்ளமை. ஏனெனில் சுவன இன்பங்கள் பற்றி அஞ்சவேண்டியதில்லை. ஆனால், உலக இன்பங்கள் நிரந்தரமாக இருப்பதில்லை. இடைக்கிடையில் வலிகளும், நோய்களும் ஏற்படுகின்றன.

சுவன இன்பங்களை அடையச் செய்யும் நற்காரியங்களில் ஈடுபட ஆர்வமூட்டல்.

التصنيفات

சுவனம் மற்றும் நரகின் தன்மைகள்