தன் இரண்டு தாடைகளுக்கிடையே உள்ள (நா)வையும், தன் இரு கால்களுக்கிடையே உள்ள மறைவுறுப்பையும் (பாவத்திலிருந்து…

தன் இரண்டு தாடைகளுக்கிடையே உள்ள (நா)வையும், தன் இரு கால்களுக்கிடையே உள்ள மறைவுறுப்பையும் (பாவத்திலிருந்து பாதுகாப்பதாக) எவர் பொறுப்பேற்கிறாரோ அவருக்கு சொர்க்கம் கிடைக்க நான் பொறுப்பு ஏற்கிறேன்.

நபி (ஸல்)அவர்கள் கூறியதாக ஸஹ்ல் இப்னு ஸஃது (ரலி) கூறுகின்றார்கள் : "தன் இரண்டு தாடைகளுக்கிடையே உள்ள (நா)வையும், தன் இரு கால்களுக்கிடையே உள்ள மறைவுறுப்பையும் (பாவத்திலிருந்து பாதுகாப்பதாக) எவர் பொறுப்பேற்கிறாரோ அவருக்கு சொர்க்கம் கிடைக்க நான் பொறுப்பு ஏற்கிறேன்".

[ஸஹீஹானது-சரியானது] [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்]

الشرح

நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் இரண்டு விடயங்களை கடைப்பிடிக்குமாறு வழிகாட்டுகிறார்கள். அவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் தனது அடியார்களில் பயபக்தி உள்ளவர்களுக்கு வாக்களித்த சொர்க்கத்தினுள் நுழைய முடியும் என குறிப்பிடுகிறார்கள். அவ்விடயங்களில் முதாலாவது அல்லாஹ்வை கோபப்படுத்துகின்ற-வெறுக்கின்ற விடயங்களை பேசுவதிலிருந்து நாவை பாதுகாத்தல். இரண்டாவது விபச்சாரத்தில் ஈடுபடுவதிலிருந்து மறைவுறுப்பை பாதுகாத்தல் என்பவைகளாகும்.

فوائد الحديث

நாவு, மறைவுறுப்பு என்பவற்றை பாவத்தில் விழாமல் பாதுகாப்பது சுவனம் நுழையக் காரணமாகும்.

நரகில் நுழைவதற்கான காரணங்களில் அதிகமானது மறைவுறுப்பையும், நாவையும் பாதுகாக்காமல் இருப்பதாகும்.

التصنيفات

சுவனம் மற்றும் நரகின் தன்மைகள், சுவனம் மற்றும் நரகின் தன்மைகள்