'யார் அல்லாஹ்வை இணைவைக்காத நிலையில் சந்திக்கிறாரோ அவர் சுவனம் நுழைவார். யார் அவனை இணைவைத்த நிலையில்…

'யார் அல்லாஹ்வை இணைவைக்காத நிலையில் சந்திக்கிறாரோ அவர் சுவனம் நுழைவார். யார் அவனை இணைவைத்த நிலையில் சந்திக்கிறாரோ அவர் நரகில் நுழைவார்'

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: 'யார் அல்லாஹ்வை இணைவைக்காத நிலையில் சந்திக்கிறாரோ அவர் சுவனம் நுழைவார். யார் அவனை இணைவைத்த நிலையில் சந்திக்கிறாரோ அவர் நரகில் நுழைவார்'.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

' அல்லாஹ்விற்கு எதனையும் இணைவைக்காத நிலையில் மரணிப்பவர், அவரின் சில குற்றங்களுக்கு-பாவங்களுக்கு- தண்டனை வழங்கப்பட்டாலும் அவரின் இறுதி முடிவு சுவர்க்கமாகும். யார் அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைத்த நிலையில் மரணிக்கிறாறோ அவர் நரகத்தில் நிரந்தரமாக இருப்பார் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

فوائد الحديث

நரகில் நிரந்தரமாக தங்குவதை விட்டு தப்பிக்க காரணமாக அமையும், ஏகத்துவத்தின் சிறப்பு இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுவர்க்கம், நரகம் மனிதனுக்கு அருகிலேயே உள்ளன, அவனுக்கும் அவற்றுக்குமிடையில் மரணத்தைத் தவிர வேறு இடைவெளியில்லை.

ஷிர்க் குறைவானதாக இருந்தாலும், கூடுதலாக இருந்தாலும் அதிலிருந்து விலகி இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டிருத்தல். ஏனெனில் அவற்றிலிருந்து விலகியிப்பதே நரகிலிருந்து தப்பிப்பதற்கான வழியாகும்.

செயல்களில் இறுதியை வைத்தே இறுதி முடிவு கணிக்கப்படுகின்றது

التصنيفات

இணைவைப்பு, சுவனம் மற்றும் நரகின் தன்மைகள்