'சுவனம் உங்களொருவரின் செருப்பின் வாரை விட மிக நெருக்கமானதாகும், நரகமும் அதே போன்றுதான்'

'சுவனம் உங்களொருவரின் செருப்பின் வாரை விட மிக நெருக்கமானதாகும், நரகமும் அதே போன்றுதான்'

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'சுவனம் உங்களொருவரின் செருப்பின் வாரை விட மிக நெருக்கமானதாகும், நரகமும் அதே போன்றுதான்'.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்]

الشرح

ஒரு மனிதனுக்கு தனது செருப்பின் வார் எவ்வளவு சமீபமாக உள்ளதோ அதேபோன்று சுவனமும் நரகமும் அவனுக்கு சமீபமாக உள்ளதாக நபியவர்கள் இந்த ஹதீஸில் அறியத் தருகின்றார்கள். ஏனெனில் அவன் சிலவேளை அல்லாஹ்வைத் திருப்திப்படுத்தும் ஒரு வணக்கத்தைச் செய்வான், அது அவனை சுவனத்தில் நுழைவித்து விடுகின்றது. சிலவேளை அவன் ஒரு பாவத்தைச் செய்திருப்பான். அவனை நரகில் அவன் அறியாமலே பல வருடங்கள் தள்ளி விடுகின்றது.

فوائد الحديث

நன்மை குறைவாக இருந்தாலும் அதனைச் செய்வதில் ஆர்வமூட்டல், பாவம் சிறியதாக இருந்தாலும் அதனை விட்டும் எச்சரித்தல்.

முஸ்லிம் தனது வாழ்வில் புரியும் செயல்களின் நிலை குறித்து எதிர்ப்பார்ப்பு மற்றும் அச்சம் ஆகிய விடயங்களை ஒன்று சேர பெற்றிருப்பது அவசியமாகும். எப்போதும் அவன் வெற்றி பெற சத்தியத்தில் உறுதியாக இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதோடு, தனது நிலை குறித்து ஏமாந்து போகக் கூடாது.

التصنيفات

சுவனம் மற்றும் நரகின் தன்மைகள்