பூரண ஈமானைப் பெற்ற விசுவாசி யாரெனில் சிறந்த பண்புகளுடையவரே. மேலும் உங்களில் சிறந்தவர் யாரெனில் தங்களின்…

பூரண ஈமானைப் பெற்ற விசுவாசி யாரெனில் சிறந்த பண்புகளுடையவரே. மேலும் உங்களில் சிறந்தவர் யாரெனில் தங்களின் மனைவியரிடம் சிறந்தவரே.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) கூறுகின்றார்கள் : "பூரண ஈமானைப் பெற்ற விசுவாசி யாரெனில் சிறந்த பண்புகளுடையவரே. மேலும் உங்களில் சிறந்தவர் யாரெனில், தங்களின் மனைவியரிடம் சிறந்தவரே".

[ஹஸனானது-சிறந்தது] [இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்]

الشرح

எவருடைய பண்புகள் நல்லவையாக இருக்கிறதோ அவரே உயர் பதவியைப் பெற்ற முஃமினாவார், என்றும்,மேலும் தனது நற் பண்புகளை வெளிப்படுத்திக் கொள்ள மிகவும் தகுதியுடையவள் தன் மணைவியே என்றும் இந்த ஹதீஸ் குறிப்பிடுகிறது.அதுமட்டுமன்றி சிறந்த மனிதன் யாரெனில் தன் மனைவியுடன் நல்ல முறையில் நடந்து கொள்கிறவனே.

فوائد الحديث

இறைநம்பிக்கை, நற்குணத்திற்கிடையில் நெருங்கிய தொடர்புள்ளது.

இஸ்லாத்தில் நற்குணங்களின் சிறப்பு இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈமான் ஒரே தரத்தில் இல்லை, அது அதிகரிக்கவும், குறையவும் செய்கின்றது.

التصنيفات

நற்குணங்கள், தம்பதியர்களுக்கிடையிலான உறவு