மக்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டான்.

மக்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டான்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) கூறுகின்றார்கள் : "மக்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டான்".

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

மக்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டான். இங்கு மக்கள் என்ற வார்த்தை விசுவாசிகள், நிராகரிப்பாளர்களில் ஒப்பந்தக்காரர்கள் போன்ற இரக்கம் காட்டத் தகுதியுடையோரையே குறிக்கின்றது.(எப்போதும் முஸ்லிம்களை எதிர்த்துப்) போராடும் நிராகரிப்பாளர்கள் இரக்கம் காட்டப்பட மாட்டார்கள், மாறாக (போர்க்களத்தில்) கொல்லப்படுவார்கள். ஏனெனில் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களையும், நபித்தோழர்களையும் வர்ணிக்கும் போது பின்வருமாறு கூறுகின்றான் : "அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள்". (பத்ஹ் : 29).

فوائد الحديث

அனைத்துப் படைப்பினங்களுக்கு இரக்கம் காட்டுவது அவசியமாகும், மக்கள் மீது அதிக கரிசனை எடுப்பதற்காகவே அவர்கள் குறித்துக் கூறப்பட்டுள்ளனர்.

இரக்கம் என்பது இஸ்லாம் மனித உள்ளங்களில் பலப்படுத்தும் படி ஊக்குவித்த மகத்தான ஒரு குணமாகும்.

மக்களிடையே பரஸ்பரம் அன்பு காட்டுவது அல்லாஹ் அவர்களுக்கு அன்பு காட்டக் காரணமாக உள்ளது.

அல்லாஹ்விற்கு இரக்கம் எனும் பண்புள்ளது, இது அவனது தகுதிக்கேற்றவாறு வெளிப்படையான அர்த்தத்திலேயே யாதார்த்தமாக அவனுக்கு உள்ள ஒரு பண்பாகும்.

التصنيفات

நற்குணங்கள்