நிச்சயமாக அல்லாஹ் மென்மையானவன்.எல்லா கருமத்திலும் அவன் மென்மையை விரும்புகிறான்.

நிச்சயமாக அல்லாஹ் மென்மையானவன்.எல்லா கருமத்திலும் அவன் மென்மையை விரும்புகிறான்.

"நிச்சயமாக அல்லாஹ் மென்மையானவன்.எல்லா கருமத்திலும் அவன் மென்மையை விரும்புகிறான்"என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.என ஆஇஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.மேலும் "நிச்சயமாக அல்லாஹ் மென்மையானவன்.அவன் மென்மையை விரும்புகிறான்.அவன் வன்முறைக்கும்,மென்மையின்மைக்கும் வழங்காததை மென்மைக்கு வழங்குகிறான்"என்றும் ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார் - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

ஹதீஸ் விளக்கம்:நிச்சயமாக அல்லாஹ் மென்மையானவன். ஆகையால் எல்லா கருமங்களும் மென்மையாக நடை பெறுவதையே அவன் விரும்புகிறான்.மேலும் தன் அடியார்களில் யார் மிருதுவான பண்புடையவராக அழகிய முறையில் ,மக்களுடன் தொடர்புகளை வைத்துக் கொள்கின்றவராக இருக்கின்றாரோ அவரை அவன் நேசிப்பான்.மேலும் வன்மையும்,கடினமும் உடையேராருக்கு வழங்காத கூலியினை மென்மையான பண்புடையோருக்கு அல்லாஹ் வழங்குவான்.மேலும் எல்லா விடயத்திலும் அவன் மிருதுவானவனாக இருக்கின்ற படியால் அது அவனுக்கு மிகவும் விருப்பமானதோர் மகத்தான பண்பாகும்,எனவே இப் பண்பு எப்பொழுதும் ஒரு முஸ்லிமிடம் இருத்தல் வேண்டும்.

التصنيفات

நற்குணங்கள்