மென்மை எதில் இருந்தாலும், அதை அது அழகாக்கிவிடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகிவிடும்.

மென்மை எதில் இருந்தாலும், அதை அது அழகாக்கிவிடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகிவிடும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆஇஷா (ரலி) கூறுகின்றார்கள் : "மென்மை எதில் இருந்தாலும், அதை அது அழகாக்கிவிடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகிவிடும்".

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

மென்மையைக் கடைபிடிப்பவன் தனது தேவைகள் அனைத்தையுமோ, சிலதையோ அடைந்து கொள்வான். வன்மையைக் கடைபிடிப்பவன் அதனை அடைந்து கொள்ள மாட்டான், அவ்வாறு அடைந்தாலும் சிரமத்துடனையே அடைவான்.

فوائد الحديث

மென்மையைக் கடைபிடிப்பது அவசியமாகும். ஏனெனில் அது ஒரு மனிதனை மக்கள் பார்வையிலும், அல்லாஹ்விடத்திலும் அழகாக்கிக் காட்டுகின்றது.

வன்முறை, கடும்போக்கு, கடின உள்ளம் போன்றவற்றை விட்டும் தூரமாக இருத்தல் அவசியமாகும். ஏனெனில் அது ஒரு மனிதனை மக்கள் பார்வையிலும், அல்லாஹ்விடத்திலும் அசிங்கமாகவே காட்டுகின்றது.

التصنيفات

நற்குணங்கள்