'நன்மை என்பது நற்குணமாகும். பாவம் என்பது உனது உள்ளத்தில் குறுகுறுப்பை ஏற்படுத்தும். மக்கள் அதைக் காண்பதை நீ…

'நன்மை என்பது நற்குணமாகும். பாவம் என்பது உனது உள்ளத்தில் குறுகுறுப்பை ஏற்படுத்தும். மக்கள் அதைக் காண்பதை நீ வெறுப்பாய்

நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம், நன்மையையும், பாவத்தையும் பற்றிக் கேட்டேன். அதற்கு நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்: 'நன்மை என்பது நற்குணமாகும். பாவம் என்பது உனது உள்ளத்தில் குறுகுறுப்பை ஏற்படுத்தும். மக்கள் அதைக் காண்பதை நீ வெறுப்பாய்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

நன்மை மற்றும் பாவம் பற்றி நபியவர்களிடம் கேட்கப்பட்ட போது, நபியவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள் : நன்மைகளில் மிக மகத்தானது, அல்லாஹ்வுடன் இறையச்சம் பேணி நற்குணமாக நடப்பதும், படைப்புக்களுடன் நோவினைகளைச் சகித்தும், கோபத்தைக் குறைத்தும், முகமலர்ச்சியை வெளிப்படுத்தியும், நல்வார்த்தைகள் பேசியும், உறவுகளை சேர்ந்து நடந்தும், கட்டுப்பட்டும், மென்மையைக் கடைப்பிடித்தும், நல்ல முறையில் தோழமை கொண்டு சேர்ந்து நடந்தும் நற்குணம் பேணுவதுமாகும் என்று பதிலளித்தார்கள். பாவம் என்பது, உள்ளத்தில் தடுமாற்றத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தும் ஒன்றாகும். உள்ளத்தில் அது பற்றிய சந்தேகம், அது பாவமாக இருக்கலாம் என்ற பயம் என்பவை இருக்கும். நல்ல மனிதர்களின் பார்வையில் அது அசிங்கமானதாக இருக்கும் என்பதால், அதை வெளிக்காட்டவும் விரும்பமாட்டீர்கள். ஏனெனில், மனித உள்ளம் இயல்பாகவே தனது நலவுகளை அடுத்தவர் பார்ப்பதை விரும்புகின்றது. எனவே அதன் ஒரு செயலை மனிதர்கள் பார்ப்பதை அது வெறுத்தால், அது ஒரு பாவம் என்றே அர்த்தமாகும்.

فوائد الحديث

நற்குணங்களில் ஆர்வமூட்டல். ஏனெனில் நற்குணங்கள் நன்மையின் மிக முக்கிய பகுதிகளாகும்.

சத்தியம், அசத்தியம் ஆகியவற்றை பிரித்தறிவது ஒரு முஃமினுக்கு குழப்பமாக இருக்கமாட்டாது. மாறாக, அவனது உள்ளத்தில் உள்ள ஒளியினால் அவன் சத்தியத்தை அறிந்துகொள்வான். அசத்தியத்தை விட்டும் விலகிச் சென்றுவிடுவான்.

மனபதற்றம், தடுமாற்றம், மக்கள் பார்த்து விடுவார்களோ என்ற பயம் என்பவை, பாவத்தின் அடையாளங்களாகும்.

ஸின்தீ அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்: இது, மக்களால் இரண்டிலொன்றைத் தெளிவாக அறிந்துகொள்ளமுடியாத குழப்பமான விடயங்களை மாத்திரமே குறிக்கும். அவ்வாறில்லாவிட்டால், தெளிவான ஆதாரம் இல்லாத போது, அதற்கெதிரான நன்மையே ஏவப்படும். அவ்வாறுதான், தடுக்கப்பட்டவை அனைத்தும் பாவமாகும். எனவே, அவற்றில் உள்ளத்திடம் தீர்ப்புக் கேட்டு, மனஅமைதியடைய வேண்டிய அவசியம் இல்லை.

இந்த ஹதீஸில் குறிக்கப்படுபவர்கள் ஈடேற்றமான இயல்பைக் கொண்டவர்களே தவிர, தனது மனோஇச்சையால் ஊட்டப்பட்டவற்றைத் தவிர, எந்தவொரு நன்மையையோ, பாவங்களையோ பிரித்து அறிந்துகொள்ளத் தெரியாத தலைகீழான உள்ளங்களைக் கொண்டவர்கள் அல்ல.

தீபீ அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்: 'இந்த ஹதீஸில் 'பிர்' என்பதற்கு பல்வேறு விளக்கங்கள் கூறப்படுவதாகச் சொல்லப்படுகின்றது. ஒரு இடத்தில், 'மனத்திற்கும், உள்ளத்திற்கும் அமைதியயைத் தருபவை' என்றும், இன்னொரு இடத்தில் 'ஈமான்' என்றும், இன்னுமொரு இடத்தில், 'உம்மை அல்லாஹ்வின் பால் நெருக்கமாக்கி வைப்பவை' என்றும், விளக்கப்பட்டுள்ளது. இங்கு 'நற்குணம்' என விளக்கப்பட்டுள்ளது. நற்குணம் என்பது, 'நோவினையை சகித்துக்கொள்ளல், கோபத்தைக் குறைத்தல், முகமலர்ச்சி, நல்ல வார்த்தைகள்' என்று விளக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் கருத்தில் ஒன்றுக்கொன்று சமீபமானவை.

التصنيفات

நற்குணங்கள், உளச் செயற்பாடுகள்