நீர் எங்கிருந்த போதிலும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! ஒரு பாவத்திற்குப் பின்னர் ஒரு நன்மை செய்துவிடு. அது…

நீர் எங்கிருந்த போதிலும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! ஒரு பாவத்திற்குப் பின்னர் ஒரு நன்மை செய்துவிடு. அது அப்பாவத்தை அழித்துவிடும். மேலும், மக்களோடு நற்பண்புடன் நடந்துகொள்

அபூ தர் ஜுன்துப் இப்னு ஜுனாதா (ரலி) அவர்களும், அபூ அப்திர் ரஹ்மான் முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அறிவிக்கின்றார்கள் : நீர் எங்கிருந்த போதிலும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! ஒரு பாவத்திற்குப் பின்னர் ஒரு நன்மை செய்துவிடு. அது அப்பாவத்தை அழித்துவிடும். மேலும், மக்களோடு நற்பண்புடன் நடந்துகொள்.

[قال الترمذي: حديث حسن] [இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்]

الشرح

இங்கு நபியவர்கள் மூன்று விடயங்களைக் கொண்டு ஏவுகின்றார்கள் : முதலாவது : இறையச்சம். அதாவது, கடமைகளைப் பேணிச் செய்வதுடன், எல்லா இடங்களிலும், காலங்களிலும், நிலைகளிலும், இரகசியத்திலும், வெளிப்படையிலும், ஆரோக்கியத்திலும், சோதனையிலும் பாவங்களைத் தவிர்த்தல். இரண்டாவது : ஏதாவதொரு பாவத்தை செய்துவிட்டால், அதற்குப் பின்னர், தொழுகை, தர்மம், உபகாரம், உறவுகளை சேர்ந்து நடத்தல், தவ்பா போன்ற நன்மைகளை செய்துவிடல். அவை அப்பாவத்தை அழித்துவிடும். மூன்றாவது : மக்களோடு, அவர்களது முகத்தில் புன்னகைத்தல், மென்மையாக நடந்துகொள்ளல், உபகாரம் புரிதல், நோவினைகளைத் தடுத்தல் போன்ற நற்குணங்களுடன் நடந்துகொள்ளுங்கள்.

فوائد الحديث

அல்லாஹ் தனது அருட்கொடைகள், பாவமன்னிப்பு, பிழைப் பொறுத்தல் என்பவற்றின் மூலம் அடியார்களுக்குச் செய்துள்ள பேருபகாரம்.

இந்த ஹதீஸ் மூன்று விதமான கடமைகளையும் உள்ளடக்கியுள்ளது. அதாவது, இறையச்சம் மூலம் அல்லாஹ்வுக்கு நிறைவேற்றவேண்டிய கடமை, பாவங்களின் பின்னர் நன்மைகள் செய்வது கொண்டு தனது ஆத்மாவுக்கு செய்யவேண்டிய கடமை, நற்குணத்துடன் நடந்துகொள்வதன் மூலம் மக்களுக்குச் செய்யவேண்டிய கடமை என்பனவே அவையாகும்.

பாவங்களுக்குப் பின்னர் நன்மைகளில் ஈடுபடுவதற்கு ஆர்வமூட்டல். நற்குணமும் இறையச்சத்தின் பண்புகளில் உள்ளதாகும். அது தனித்துக் கூறப்படக் காரணம், அதைத் தெளிவாகக் கூறுவதற்கான தேவை இருப்பதனாலாகும்.

التصنيفات

நற்குணங்கள்