உங்களில் நற்பண்புடையவர் உங்களில் மிகவும் சிறந்தவர்'என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்'

உங்களில் நற்பண்புடையவர் உங்களில் மிகவும் சிறந்தவர்'என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்'

அப்துல்லாஹ் இப்னு அம்ர்; ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகிறார்கள்: 'நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கெட்ட மனிதராகவோ, கெட்ட பேச்சுக்கள் பேசுகின்றவராகவோ இருக்கவில்லை. .அவர்கள் ' உங்களில் நற்பண்புடையவர் உங்களில் மிகவும் சிறந்தவர்'என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்'.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

கெட்ட, அசிங்கமான பேச்சுக்கள் பேசுதல், தீய, அசிங்கமான செயல்களில் ஈடுபடுதல் ஆகியவை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பண்பாட்டில் இருக்கவில்லை, அத்துடன் அதன் மீது நாட்டம் கொண்டவர்களாகவ, அதனை மனம் விரும்பி செய்யக் கூடியவர்களாகவோ இருக்கவுமில்லை. மாறாக அவர்கள் மகத்தான நற்பண்புடையவராகவே இருந்தார்கள். உங்களில் அல்லாஹ்விடத்தில் சிறந்தவர் உங்களில் நற்பண்பு மிக்கவரே என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள். நற்பண்புகள் என்பது நன்மையான விடயங்களை செய்தல், புண்முறுவல் பூத்தல், தீங்கை (கொடுமைகளை) தடுத்தல், அதில் எதிர்ப்படும் சிரமங்களை தாங்கிக்கொள்ளல், நல்ல விடயங்களில் மக்களுடன் ஒன்றாக இருத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

فوائد الحديث

ஒரு முஃமின் மோசமான வார்த்தை பேசுவதிலிருந்தும், தீய மற்றும் அசிங்கமான செயல்களிலிருந்தும் விலகியிருப்பது கட்டாயமாகும்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் உயரிய குணம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளமை. நற்செயலும், நல்வார்த்தையும் தவிர வேறு எதுவும் அவர்களிடமிருந்து வெளிப்பட்டதில்லை.

நற்பண்புகள் என்பது விசுவாசிகள் தமக்கிடையே போட்டியிட்டுக்கொள்வதற்கான ஒரு களம். அதில் முந்திக் கொண்டவர் சிறந்த மற்றும் பரிபூரண விசுவாசியாவார்.

التصنيفات

நற்குணங்கள்